twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னம் சொன்னது ஏமாற்றமா இருந்துச்சு... இயக்குநர் பொன்ராம் ஆதங்கம்

    |

    சென்னை : சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கி ஓடிடியில் வெளியாகியுள்ள எம்ஜிஆர் மகன்.

    முன்னதாக மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு படத்தை இயக்கியிருந்தார் பொன்ராம்.

    ஆனால் இறுதியாக அவரது படத்திற்கு பதிலாக ப்ரியதர்ஷன் இயக்கிய படம் சேர்க்கப்பட்டது குறித்து பொன்ராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    தீபாவளிக்கு ரிலீசாகும் சசிக்குமார் படம்... சூப்பர் மெலடி பாடல் வெளியீடு! தீபாவளிக்கு ரிலீசாகும் சசிக்குமார் படம்... சூப்பர் மெலடி பாடல் வெளியீடு!

     எம்ஜிஆர் மகன் படம்

    எம்ஜிஆர் மகன் படம்

    நடிகர் சசிக்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். படம் தீபாவளியையொட்டி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    படத்திற்கு அந்தோணிதாசன் பாடல்களுக்கான இசையையும் நவ்ஃபல் ராஜா பின்னணி இசையையும் அமைத்துள்ளனர். இதில் நவ்ஃபல் ராஜா ஸ்கோர் செய்கிறார். இதேபோல படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமியும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். ஆனால் படத்தில் ரசிகர்களை கவரும் அம்சங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

    பொன்ராம் பேச்சு

    பொன்ராம் பேச்சு

    இந்நிலையில் படத்திற்கு பிரமோஷன் அளிக்கும் வகையில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பொன்ராம் மணிரத்னம் குறித்து பேசியுள்ளார். கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களை மனதில் வைத்து மணிரத்னம் நவரசா ஆந்தாலஜியை தயாரித்திருந்தார்.

    நவரசாவில் பொன்ராம்

    நவரசாவில் பொன்ராம்

    இதில் 9 நவரசங்களை கொண்ட படங்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில், சிரிப்பு ரசத்தை மையமாக வைத்து பொன்ராம் படம் எடுத்திருந்தார். இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். இதுகுறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு படமும் எடுக்கப்பட்டது.

    பொன்ராமிற்கு பதிலாக ப்ரியதர்ஷன்

    பொன்ராமிற்கு பதிலாக ப்ரியதர்ஷன்

    ஆனால் இந்த ஆந்தாலஜி வெளியான போது சிரிப்பு ரசத்தில் ப்ரியதர்ஷன் இயக்கியிருந்த படம் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது படம் இணைக்கப்படாததற்கான காரணம் தற்போதுவரை தனக்கு தெரியாது என்றும் தங்களுடைய டீம் சிறப்பாக பணிபுரிந்ததாகவும் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

    மணிரத்னம் விளக்கம்

    மணிரத்னம் விளக்கம்

    மணிரத்னம் படத்தின் ஆடியோவின் பிரச்சினை இருப்பதாக தனக்கு காரணம் கூறியதாகவும், ஆனால் அந்த விளக்கம் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் பொன்ராம் மேலும் கூறியுள்ளார். நவரசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் தனது படத்தை மற்ற தளத்திற்கு விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Ponram felt bad on Maniratnam's reply on his movie in Navarasa
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X