டைரக்டர் பிரியதர்ஷனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதி
சென்னை : பாலிவுட், தென்னிந்திய மொழிகளில் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பலமுகங்களைக் கொண்ட பிரியதர்ஷன், 1978 முதல் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் மலையாள படங்களை மட்டுமே இயக்கி வந்த பிரியதர்ஷன், 1987 ல் சின்னமணிகுயிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.

95 க்கும் மேற்பட்ட படங்கள்
அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாததால் மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தியதுடன், தெலுங்கு படங்கள் இயக்கும் முயற்சிலும் ஈடுபட்டார். பிறகு மீண்டும் கோபுர வாசலிலே படத்தை தமிழில் இயக்கினார். இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 95 க்கும் அதிகமான படங்களை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.

முதல் பெரிய பட்ஜெட் படம்
தேசிய விருது பெற்ற டைரக்டரான பிரியதர்ஷன், மோகன்லாலை வைத்து பான் இந்தியன் படமாக மரைக்கர் : அரபிக்கடலின்டே சிம்மம் படத்தை சமீபத்தில் இயக்கி இருந்தார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டு, பிறகு ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டது. மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இது தான்.

முதல் டைரக்டர்
மலையாளத்தில் முதல் முறையாக தெளிவான சவுண்ட், அதிகம் கலர்ஃபுல்லான, ஹை குவாலிட்டி டப்பிங்கை அறிமுகம் செய்த டைரக்டர் பிரியதர்ஷன் தான். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பிரியதர்ஷன் பெற்றுள்ளார். இவரது மகள் கல்யாணி பிரியதர்ஷனும் தற்போது பிஸியான ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி
மரைக்கர் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் பிரியதர்ஷன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரியதர்ஷன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











