Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பார்த்திபன் வேதனை!
மும்பை : இயக்குநரும் நடிகருமான ஆர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.
Recommended Video
இவரது ஒத்த செருப்பு படத்தில் இவர் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் தற்போது இந்தியில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் பச்சன் நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பார்த்திபன் காலில் விழுந்த கேஎஸ் ரவிக்குமார்.. என்ன காரணம்.. அவரே சொல்லியிருக்காரு பாருங்க!

இயக்குநர் ஆர் பார்த்திபன்
நடிகரும் இயக்குநருமான ஆர் பார்த்திபன், தனது அடுத்தடுத்த வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். மற்ற ஹீரோக்களின் படங்களிலும் சிறப்பான கேரக்டர் மற்றும் வில்லன் ரோல்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சுழல் வெப் தொடர் வெளியாகியுள்ளது.

சுழல் தொடரில் பார்த்திபன்
இந்தத் தொடரை புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். கதையும் எழுதியுள்ளனர். தொடரில் காணாமல் போகும் இளம்பெண்ணின் தந்தையாக நடித்துள்ளார் ஆர் பார்த்திபன். அழுத்தமான மற்றும் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை இந்தத் தொடரில் வெளிப்படுத்தியுள்ளார். பெண்ணை காணாமல் பரிதவிக்கும் தருணங்களில் இவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியில் ஒத்த செருப்பு
முன்னதாக பார்த்திபன் மட்டுமே நடித்திருந்த ஒத்த செருப்பு படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தை அபிஷேக் பச்சன் நடிப்பில் பாலிவுட்டில் எடுத்து முடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு தற்போது நடந்து முடிந்துள்ளது. விரைவில் படம் ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பராக மாறிய அபிஷேக் பச்சன்
இந்நிலையில் ஆடியோ வெளியீட்டில் பேசிய பார்த்திபன், அபிஷேக் பச்சன், தன்னுடைய சிறப்பான நண்பராக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அபிஷேக் பச்சன், இந்திய அளவில் சிறப்பான இயக்குநர் என பார்த்திபனை குறிப்பிட்டார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல் படம்
இதனிடையே அடுத்ததாக பார்த்திபன் சிங்கிள் ஷாட்டில் எடுத்து முடித்துள்ள இரவின் நிழல் படம் வரும் ஜூலை 15ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படம் கேன்ஸ் விருது விழாவில் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்திக்கு போகும் இரவின் நிழல்
இந்நிலையில் இந்தப் படத்தையும் இந்திக்கு கொண்டு செல்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தில் அஜய் தேவ்கனை வைத்து இயக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் வேதனை
இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் புதிய பாதை படம் போன்ற ஜனரஞ்சகமான படம் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 50 வயது மனிதனின் கதையை பல்வேறு காலகட்டத்தில் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.