'சின்னகவுண்டர்' படம் பற்றி தங்கர்பச்சான் சூடான விமர்சனம்...ஆர்.வி.உதயகுமார் சுவாரஸ்யம்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான டைரக்டர்களில் ஒருவர் தங்கர்பச்சான். அழகி, அம்மாவின் கைபேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட பல படங்களை கொடுத்தவர். அழுத்தமான, உணர்வு பூர்வமான கதைகளை படமாக்கி வெற்றி பெற்றவர் தங்கர் பச்சான்.

தங்கர்பச்சான், தனது மகனை ஹீரோவாக வைத்து தக்கு முக்கு திக்கு தாளம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ஆர்.வி.உதயக்குமார், பேரரசு, கஸ்தூரி ராஜா, பாண்டிராஜ், நடிகர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மிரள வைத்த தங்கபச்சான்

மிரள வைத்த தங்கபச்சான்

இந்த விழாவில் தங்கபச்சான் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை டைரக்டர் ஆர்.வி.உதயக்குமார் மேடையில் பகிர்ந்து கொண்டார். அவரின் கலகலப்பான பேச்சு, விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், தங்கபச்சான் காலேஜில் எனக்கு ஜுனியர். அவரை பார்த்தாலே அனைவரும் மிரண்டு ஓடுவோம். அப்படி ஒரு ஆள். விமர்சனகர்த்தா என்றால் அவரை போல் ஒருவரை பார்க்க முடியாது.

பயங்கர கோபக்காரர்

பயங்கர கோபக்காரர்

நான் என் படத்தில் ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருந்தாலும், அதில் கேமிராமேனுக்கு அசிஸ்டென்ட்டாக இருக்கும் தங்கபச்சான், அந்த சீன் பிடிக்கவில்லை என்றால், என்னங்க...என்ன பண்ணுறீங்க. இதெல்லாம் ஷாட்டா என கேட்டு தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து போய் விடுவார். அப்புறம் கேமிராமேனை அழைத்து கேட்டால் தான் விஷயமே புரியும். யுகே சேது இப்படி ஆவதற்கு தங்கபச்சான் தான் காரணம். ஆத்மார்த்தமான டைரக்டர் தங்கர்.

தமிழை கட்டிக் கொண்டவர்

தமிழை கட்டிக் கொண்டவர்

தங்கர் பச்சான் அனைவரையும் கலாய்ப்பார். ஆனால் அது உணர்வுபூர்வமாக இருக்கும். அழகி, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களை பார்த்து விட்டு இவனை திருத்த முடியாது. இவன் இப்படி தான் படம் எடுப்பான் என விட்டு விட்டேன். தற்போது மகனை வைத்து அழகான படத்தை எடுத்துள்ளான். நாமெல்லாம் தமிழை நேசிக்கிறோம். இவன் தமிழை சுவாசிப்பவன். நாமெல்லாம் தமிழை கற்றுக் கொண்டோம். ஆனால் இவன் மட்டும் தான் தமிழை கட்டிக் கொண்டான். இவரது முனைவி பெயர் தமிழ். இதை கூட டைரக்டர் பேரரசு தான் என்னிடம் சொல்லி மேடையில் சொல்லுங்கள் என்றார். எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள் பாருங்க.

சின்னகவுண்டர் பற்றி தங்கர்பச்சான்

சின்னகவுண்டர் பற்றி தங்கர்பச்சான்

என்னுடைய ஒரு படத்தை பார்த்து விட்டு கண்ணா பின்னாவென திட்டி ஒரு கடிதம் எழுதி இருந்தார். இப்பொழுதும் அந்த கடிதத்தை வைத்துள்ளேன். அந்த கடிதத்தை என் மனைவி எடுத்து பத்திரமாக வைத்துள்ளார். நீங்க வீட்டிற்கு வந்தா அவ்வளவு தான். அப்படி திட்டி இதுவரை எனக்கு யாரும் கடிதம் எழுதியதில்லை.. சின்னகவுண்டர் படத்தை பார்த்து விட்டு வீட்டிற்கே வந்து, என்னங்க பண்ணிருக்கீங்க என்றார். முதலில் என்ன சொல்ல வருகிறார் என புரியாமல் மிரண்டு விட்டேன். பிறகு தான் தெரிந்தது அந்த படத்தை பாராட்டிகிறார் என்றார். அது ஒரு வாழ்க்கை என்றார். இவர் திட்டுகிறாரா, பாராட்டுகிறாரா என்பதே எனக்கு புரிய போதும் போதும் என்றாகி விட்டது.

இனி டைரக்டர் பசங்க தான் ஹீரோ

இனி டைரக்டர் பசங்க தான் ஹீரோ

தங்கர்பச்சானின் மகன் நிச்சயம் பெரிய நடிகராக வருவார். மைனசாக இருந்தால் தான் தமிழ் சினிமாவில் வெற்றி பெற முடியும். நான் டைரக்ட் பண்ணினா என் படத்தில் நீ தான் ஹீரோ. டைரக்டர் அறிமுகம் செய்த அவர்களின் பிள்ளைகள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். விஜய், தனுஷ் என அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இவரும் வெற்றி பெறுவார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமார், டைரக்டர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இனி டைரக்டர் மகன்கள் தான் ஹீரோ. அப்படி இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

ஹீரோ முக்கியமே இல்லை

ஹீரோ முக்கியமே இல்லை

ஹீரோக்கள் பசங்க டைரக்டர் ஆவதற்கும், டைரக்டர்கள் பசங்க ஹீரோ ஆவதற்கும் வித்தியாசம் உண்டு. ஹீரோ படங்களை புக் செய்ய வேண்டும் என்றால் அவர்களை உடனடியாக பார்க்க முடியாது. பிஆர்ஓ யாரையாவது பிடித்து போய் கதை சொல்ல வேண்டும். அவர் அப்பாவிடம் கதை சொல்லுங்க என்பார். மற்ற மேட்டர் ஓகே ஆனால் மட்டும் தான் படம் ஓகே ஆகும். ஆனால் டைரக்டர் பசங்க கிட்ட கதை சொன்னால் கன்டென்ட் இருந்தால் ஓகே சொல்லி விடுவார்கள். ஹீரோவிற்காக படம் ஓடாது. கன்டென்ட் இருந்தால் தான் படம் ஓடும். அந்த ஹீரோவின் இமேஜை உயர்த்த வேண்டுமானால் கன்டென்ட் உதவி செய்திருக்கும். ஹீரோக்கள் முக்கியமே அல்ல. கன்டென்ட் தான் முக்கியம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X