twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கள்ள ட்ரெயினில் சென்னை வந்த இயக்குனர்... அதற்காக அவர் செலுத்திய அபராதம் !

    |

    சென்னை - நீ வருவாய் என படத்தின் மூலம் தமிழ் திரையில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என முத்திரை பதித்தவர்.

    இந்த படத்தில் கதாநாயகனாக பார்த்திபன் கதாநாயகியாக தேவயானி நடித்திருப்பார்கள். நடிகர் அஜித் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.அதன் பிறகு அவர் இயக்கிய எந்த ஒரு படமும் அவர் எதிர்பார்த்த வெற்றி அந்த அளவுக்கு பெறவில்லை.

    தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார் ராஜகுமாரன்.ராஜகுமாரன் இயக்குனர் ஆவதற்காக சென்னைக்கு திருட்டு ரயிலில் வந்த அவரிடம் அபராதமாக பணத்திற்கு பதில் வேறு ஒரு பொருளை கேட்டு வாங்கி ராஜகுமாரனை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார் டிக்கெட் பரிசோதகர்.

    இயக்குனராக துடிக்கும் ஜான் விஜய்... ரஜினிக்கு கதை சொன்னாரா ?இயக்குனராக துடிக்கும் ஜான் விஜய்... ரஜினிக்கு கதை சொன்னாரா ?

    ஆஸ்தான கதாநாயகி தேவயானி

    ஆஸ்தான கதாநாயகி தேவயானி

    ராஜகுமாரன் தமிழில் நான்கு படங்களும் தெலுங்கில் ஒரு படமும் இயக்கியுள்ளார். நீ வருவாய் என படத்தில் பார்த்திபன், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரம், காதலுடன் படத்தில் முரளி, சிவராம் படத்தில் சாய்குமார், திருமதி தமிழ் படத்தில் ராஜகுமாரன் கதாநாயகர்களாக நடிக்க அனைத்து படங்களிலும் கதாநாயகியாக தேவயானியே நடித்திருப்பார்.

    பரபரப்பாக பேசப்பட்ட திருமணம்

    பரபரப்பாக பேசப்பட்ட திருமணம்

    சூரியவம்சம், நீ வருவாய் என படப்பிடிப்பின்போது ராஜகுமாரன் தேவயானி இருவர் இடையில் காதல் மலர்ந்து அது அவர்களை திருமணம் வரை கொண்டு சென்றது. இருவர் பெற்றோர்களுக்கும் தெரியாமல் 2001 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்தது. அந்த காலகட்டங்களில் ராஜகுமாரன் தேவயானி திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது தனி கதை.

    வாழ்ந்து காட்டிய தேவையானி ராஜகுமாரன்.

    வாழ்ந்து காட்டிய தேவையானி ராஜகுமாரன்.

    பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை தேவயானியை அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவருடன் உறவை முறித்துக்கொண்டு தள்ளி இருந்தனர். ஆனாலும் ராஜகுமாரன் தேவயானி தம்பதி இருபது வருட காலம் தாண்டி சந்தோஷமாக வாழ்ந்து காட்டி காதலுக்கு மரியாதை சேர்த்துள்ளனர். தேவயானி வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வெற்றிக் கொடி நாட்டியவர். குடும்ப கதாநாயகி என்றால் தேவயானி என்னும் பெயரை மக்கள் மத்தியில் வாங்கியுள்ளார்.

    பணத்துக்குப் பதில்

    பணத்துக்குப் பதில்

    சமீபத்தில் ராஜகுமாரன் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவிற்காக ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்ததும் அதற்காக அபராதம் கட்டியதையும் குறிப்பிட்டுள்ளார். டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தபோது டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக் கொண்டதாகவும் , அவர் என்னிடம் இருந்த - நான் எழுதிய கவிதைத் தொகுப்பை படித்து பார்த்து, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்கு அபராதமாக கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை அடங்கிய பேப்பர் மட்டும் கிழித்துக் கொண்டார் என மிகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இது ஒரு கவிஞனுக்கும், கவிதைக்கும் மற்றும் தமிழுக்கும்,தமிழ் ரசனை உள்ளவர்கள் மீதும் கொண்ட மரியாதை,அன்பு என்பதை புரிய வாய்த்த தருணமாக இன்று வரை ராஜகுமாரன் சொல்லி வரும் ஒரு உண்மை சம்பவம் ஆகும்.

    English summary
    Director Rajakumaran Came to Chennai First Time Without Buying Train Ticket
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X