பிள்ளைகளுக்கு மீன் வாங்க காசு கேட்டேன்.. அவங்க அதைக்கூட கொடுக்கல.. தேவயானி கணவர் வேதனை

சென்னை: தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் இப்போது சினிமாவிலிருந்து டோட்டலாகவே ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் தனியார் யூடியுப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார் அவர். அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் விக்ரமனிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்து நீ வருவாய் என படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ராஜகுமாரன். பார்த்திபன், அஜித், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படமும் சூப்பர் ஹிட்தான். பெரிய இயக்குநராக வருவார் என்று எதிர்பார்த்த சூழலில் காலம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

தேவயானியுடன் திருமணம்: முதல் படத்தை இயக்கியபோதே நடிகை தேவயானியுடன் ராஜகுமாரனுக்கு காதல் ஏற்பட்டது. இரண்டு பேரின் காதலுக்கும் முதலில் வீட்டில் எதிர்ப்பு வலுக்க; காதலில் இருவரும் ஸ்ட்ராங்காக இருந்ததால் அந்தக் காதல் நல்லபடியாக திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு ஒன்றிரண்டு படங்களை இயக்கிய ராஜகுமாரன் ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

Director Rajakumaran Reveals He Didn t Get Paid for His Films Shocking Confession About Sandhanam s Movie

நடிகர் ராஜகுமாரன்: அதேசமயம் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் அவர். அந்தவகையில் கடுகு, சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனது கணவரின் இமேஜை ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆக்கிவிட்டார்கள் என்று தேவயானி ஒரு பேட்டியில் வருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜகுமாரனின் பேட்டி: இந்நிலையில் ராஜகுமாரன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'நான் சினிமாவில் பெரிதாக சம்பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. நடிக்கும்போதுகூட சம்பளம் வாங்கியதில்லை. கடுகு என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் கன்னட உரிமத்தை வாங்கி நான் நடித்த ரோலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்தார். எவ்வளவு பெரிய படம் என்று பாருங்கள். ஆனால் அதற்கு படக்குழு சம்பளமே தரவில்லை.

மீன் வாங்கக்கூட கொடுக்கல: அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது எனது கார் கொஞ்சம் தூரமாக நின்றது. அந்த சமயத்தில் மீன் அங்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. கடல் மீன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொண்டு போகலாமே என நினைத்து; அந்த பட தயாரிப்பு மேனேஜரை கூப்பிட்டு, 'எனது கார் கொஞ்சம் தூரமாக நிற்கிறது. மீன் வாங்க வேண்டும். ஒரு 500 ரூபாய் கொடுங்கள்' என்று கேட்டேன். அவர்கள் அதைக்கூட தரவில்லை.

சந்தானமும் கொடுக்கவில்லை: அதேபோல் சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தேன். அந்தப் படத்துக்கும் அவர்கள் சம்பளம் தரவில்லை. ஃப்ளைட் டிக்கெட் போட்டுக்கொடுத்தார். நல்ல ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்தார். சூப்பர் சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். அவ்வளவுதான் அந்தப் படத்துக்காக அவர்கள் எனக்கு செய்தது. சம்பளமாக எதுவும் தரவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X