ரஜினியோட இணைஞ்சு படம் பண்றது பெருமை.. அதுக்காக காத்திருக்கேன்.. தமிழில் உரக்க சொன்ன ராஜமௌலி!

சென்னை : பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ளது பிரம்மாஸ்திரா படம். இந்தப் படத்திற்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளத.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

சென்னையில் நடைபெற்ற இந்த பிரமோஷன்களில் ஆலியா பட், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் 7 ஆண்டுகள் உழைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரம்மாஸ்திரா படம்

பிரம்மாஸ்திரா படம்

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்தப் படத்தை அயன் முகர்ஜி தன்னுடைய 7 ஆண்டுகால உழைப்பைக் கொடுத்து உருவாக்கியுள்ளார். நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

முக்கியமான ரோலில் ஷாருக்கான்

முக்கியமான ரோலில் ஷாருக்கான்

இந்தப் படத்தில் ஷாருக்கான் முக்கியமான கேமியோ ரோலில் வனராஸ்ட்ரா என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை அறிய ரசிகர்களை ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதை வெளிப்படுத்தாமல படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.

ஆலியா பட் வில்லியா?

ஆலியா பட் வில்லியா?

மேலும் இந்தப் படத்தில் மௌனி ராய் தான் வில்லியாக நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் படத்தில் அவர் மெயின் வில்லி இல்லையாம். இஷா என்ற கதாபாத்திரத்தில் ரன்பீரின் காதலியாக நடித்துள்ள ஆலியா பட்தான் மெயின் வில்லி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கலாம்.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் பிரமோஷன்களில் கடந்த சில தினங்களாக படக்குழுவினர் ஈடுபட்டனர். தற்போது சென்னையில் நடைபெற்ற பிரமோஷன்களில் நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரஜினியை இயக்குவது பெருமை

ரஜினியை இயக்குவது பெருமை

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இவர்கள் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். குறிப்பாக ரஜினியுடன் இணைந்து படம் இயக்குவீர்களா என்று வழக்கம்போல ராஜமௌலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஜினியுடன் படம் செய்வது, அவரை இயக்குவது பெருமை என்று கூறினார்.

அனைத்து இயக்குநர்களின் கனவு

அனைத்து இயக்குநர்களின் கனவு

எல்லா இயக்குநர்களும் அந்த தருணத்திற்காக காத்திருப்பதாகவும் ஆனால் இதற்கான அனைத்து விஷயங்களும் ஒருங்கிணைந்து வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக தனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தான் காத்திருப்பதாகவும் ராஜமௌலி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X