ஆர்ஆர்ஆர் டிரைலர் ரிலீஸ்... புதிய தேதியை வெளியிட்ட ராஜமெளலி
ஐதராபாத் : டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிரம்மாண்ட படம்.
1920 களில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள, நட்பை அடிப்படையாகக் கொண்ட படம் ஆர்ஆர்ஆர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஐதராபாத் நவாப் பற்றிய கதை என கூறப்படுகிறது. மிரட்டல் இசையுடன் வெளியாகி உள்ள ஆர்ஆர்ஆர் டீசர் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

பிரம்மாண்ட ரிலீஸ்
டிவிவி தனய்யா தயாரித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பிரம்மாண்டமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வரவேற்ற ரசிகர்கள்
சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் டீசர், ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவைகள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் படம் எப்போ ரிலீசாகும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

தள்ளி வைக்கப்பட்ட டிரைலர்
ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் டிரைலர் ரிலீசை தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைப்பதாகவும், டிரைலர் ரிலீஸ் செய்யப்படும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய தேதி அறிவிப்பு
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் டிசம்பர் 9 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக டைரக்டர் ராஜமெளலியே இன்று ட்விட்டரில் அறிவித்துள்ளார். டிரைலர் ரிலீஸிற்கான புதிய தேதி அறிவிப்பை அடுத்து, ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் மாஸாக ஓடி வரும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











