Don't Miss!
- News
அவசரப்படாதீங்க அண்ணே.. எடப்பாடிக்கு போன "அட்வைஸ்".. புதிய கூட்டணியை கைவிட்டது ஏன்? என்ன நடந்தது?
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சரியான ஸ்கிரிப்ட் உடன் ரஜினிகாந்தை இயக்க ஆசை... ராஜமௌலி வெளிப்படை!
சென்னை : இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர்.
ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தப் படம் தமிழிலும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சென்னையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அய்யோ பாவம்...கத்ரினா கைஃப் திருமணத்தால் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நிலைமையா ?

இயக்குனர் ராஜமௌலி
இயக்குனர் ராஜமௌலி சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். இவரது பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஜனவரி 7ல் ரிலீஸ்
இந்த படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிவிவி நிறுவனம் தயாரிப்பு
டிவிவி நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பத்திரிகையாளர் சந்திப்பு
தமிழிலும் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் டைரக்டர் ராஜமௌலி, ஆலியா பட், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூப்பர்ஸ்டாரை இயக்க ராஜமௌலி ஆசை
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமௌலி தான் சரியான ஸ்கிரிப்ட் கிடைத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜமௌலி சூப்பர் ஸ்டார் காம்பினேஷனை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ட்ரெய்லருக்கு சிறப்பான வரவேற்பு
இரு தினங்களுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 51 மில்லியன் வியூக்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை இந்திய அளவில் எட்டியுள்ள இரண்டாவது படம் ஆர்ஆர்ஆர். விஜய்யின் பிகில் படம் இதில் முதலிடத்தில் உள்ளது.