»   »  கடவுள் இருக்கான் குமாரு.. ஜிவி.பிரகாஷ் - எம்.ராஜேஷ் கூட்டணியில்

கடவுள் இருக்கான் குமாரு.. ஜிவி.பிரகாஷ் - எம்.ராஜேஷ் கூட்டணியில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு என்று தான் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார் காமெடி இயக்குநர் ராஜேஷ்.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜேஷ் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஹாட்ரிக் வெற்றிப் படங்களை அளித்தார்.

Director Rajesh's Next Movie Title

அடுத்தடுத்து இவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க போன்ற தோல்வியைத் தழுவியதில் தற்போது ராஜேஷின் மார்க்கெட் சர்ரென்று இறங்கிக் கிடக்கிறது.

இதனால் அடுத்து ஒரு வெற்றியைத் தரவேண்டிய கட்டாயத்திற்கு ராஜேஷ் தள்ளப்பட்டிருக்கிறார். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்திருக்கும் ராஜேஷ் தனது அடுத்த படத்திற்கு கடவுள் இருக்கான் குமாரு என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

அடுத்த வருடம் பிப்ரவரி 16ம் தேதி கடவுள் இருக்கான் குமாரு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கின்றனர். ஆச்சரியமாக இந்தமுறை சந்தானம் இல்லாமல் படமெடுக்க முன்வந்திருக்கிறார் ராஜேஷ்.

English summary
Director Rajesh's Next Team Up with G.V.Prakash Kumar, the Movie Titled by Kadavul Irukkaan Kumaaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil