»   »  பீட்டா... அப்படியே சிக்கன் 65, மட்டன் பாயா, பீப் ப்ரைக்கு எதிராவும் போராடலாமே! - இயக்குநர் ராஜேஷ்

பீட்டா... அப்படியே சிக்கன் 65, மட்டன் பாயா, பீப் ப்ரைக்கு எதிராவும் போராடலாமே! - இயக்குநர் ராஜேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கும் பீட்டா அமைப்பு, அப்படியே சிக்கன் 65, மட்டன் பாயா, பீப் கறிக்கு எதிராகவும் போராடலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Director Rajesh's question to PETA

திரைத் துறையினரும் முழுமையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், தங்கர் பச்சான், அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ் என பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் ராஜேஷும் இவர்களுடன் இணைந்துள்ளார்.

பீட்டாவுக்கு ராஜேஷ் எழுப்பியுள்ள கேள்வி இதுதான்... "பீட்டா ஏன் சிக்கன் 65, மட்டன் பாயா, மீன் வறுவல், பீப் கறி மற்றும் ஆம்லேட்டுக்கு எதிராக ஏன் போராடவில்லை?" என்று கேட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Director Rajesh strongly oppose PETA for its stand in Jallikkattu and questioned the organisation why they try to ban all non veg items.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil