»   »  நடிகர்கள் பிரகாஷ் ராஜ், மகேஷ்பாபுவை ட்விட்டரில் சரமாரியாகத் திட்டித் தீர்த்த ராம் கோபால் வர்மா

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், மகேஷ்பாபுவை ட்விட்டரில் சரமாரியாகத் திட்டித் தீர்த்த ராம் கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 3 கிராமங்களை தத்தெடுத்தனர்.

இந்த செயலுக்கு டோலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். மகேஷ்பாபு, பிரகாஷ் ராஜை மட்டுமின்றி ஆந்திர அரசையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் இந்த செயலால் டோலிவுட் வட்டாரத்தில் சற்றே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் மகேஷ்பாபு அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கிராமம் ஒன்றை தத்தெடுத்திருந்தார். ஸ்ரீமந்துடு படத்தில் நடித்த மகேஷ்பாபு படத்தில் வருவது போன்று நிஜத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தது அவருக்கு பாராட்டுகளை கொண்டு வந்து சேர்த்தது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

மகேஷ்பாபுவைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். இது ஒரு நல்ல மாற்றமாக டோலிவுட் உலகில் பார்க்கப்பட்டது.

பரிகாசித்த தெலுங்கு இயக்குனர்

பரிகாசித்த தெலுங்கு இயக்குனர்

டோலிவுட் இயக்குநர் தேஜா மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ் ராஜின் செயல்களை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பரிகசித்திருந்தார். அதாவது இருவரும் வருமான வரியிலிருந்து விலக்கு பெறவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று கூறியிருந்தார்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

இயக்குநர் தேஜாவைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இவர்கள் இருவரையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் மாநில அரசையும் இந்த விவகாரத்தில் விட்டு வைக்கவில்லை வர்மா. அரசு எப்படி இதனை அனுமதிக்கலாம் என்ற ரீதியில் ஆந்திர அரசையும் கடுமையாகத் திட்டியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்த சம்பவத்தைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார் சர்ச்சைகளுக்குப் பெயர் போன ராம் கோபால் வர்மா. இவரின் இந்த செயலால் தற்போது டோலிவுட் உலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

கிராமங்களை ஏற்க மக்கள் அனாதைகளா?

நடிகர்கள் தத்தெடுக்க கிராமங்களில் இருப்பவர்கள் அனாதைகளா அல்லது பிச்சைக்காரர்களா இல்லை உடல் ஊனமுற்றவர்களா?. அந்தக் கிராமங்களில் இருப்பவர்களுக்கு சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால் இதனை அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் இதனை அவர்கள் செய்யாமல் அவர்களின் எண்ணங்களுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

பல்வேறு கிராமங்களை

பிரபலங்கள் தத்தெடுக்கும் போது ஏன் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும். அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் எனில் பல்வேறு கிராமங்களை தத்தெடுக்க வேண்டியது தானே?.அதைவிட்டு ஏன் ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்க வேண்டும்?

அரசாங்கத்தின் சதி

நான் நினைக்கிறேன் கிராமங்களை தத்தெடுக்க பிரபலங்களைத் தூண்டுவது அரசாங்கத்தின் ஒரு சதியாக் கூட இருக்கலாம் என்று இந்த விவகாரத்தில் தெலுங்கு தேச அரசையும் ஒரு கை பார்த்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. இதைப் போன்று மேலும் நிறைய ட்வீட்களை ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Director Ram Gopal Varma (RGV) has come down heavily on celebs like Mahesh Babu and Prakash Raj for insulting the poor villagers by adopting their villages.Tollywood celebrities like Mahesh Babu and Prakash Raj recently adopted 3 villages in Andhra Pradesh and Telengana. Many praised them, but their act did not go down well some people. Director Teja mocked them in his press conference, saying they might have adopted the villages to get some tax exemption.Ram Gopal Varma is the latest celebrity to attack them on a public platform.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more