»   »  தரமணி ஐடி இளைஞர்களுக்கு எதிரான படமா? - இயக்குநர் ராம் #Taramani

தரமணி ஐடி இளைஞர்களுக்கு எதிரான படமா? - இயக்குநர் ராம் #Taramani

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராமின் மூன்றாவது படைப்பாக வருகிறது தரமணி. தரமணி என்றாலே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பது நினைவுக்கு வரும். எனவே இந்தப் படத்தில் ஐடி துறை இளைஞர்களுக்கு எதிராக ராம் ஏதாவது சொல்லியிருப்பாரோ என்று சிலர் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களுக்கு ராம் சொல்லும் விளக்கம் இது:

என் பார்வையில்...

என் பார்வையில்...

''அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதைதான் 'தரமணி'.

புரிதலில் உள்ள சிக்கல்

புரிதலில் உள்ள சிக்கல்

உலக மயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்க்கம் தங்கள் காதலி அல்லது மனைவியைப் புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி 'தரமணி' படத்தில் பேசியுள்ளேன்.

ஐடி பற்றி மட்டுமல்ல

ஐடி பற்றி மட்டுமல்ல

இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. 'தரமணி' பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக 'தரமணி' இருக்கும்," என்றார்.

ஆன்ட்ரியா - வசந்த் ரவி

ஆன்ட்ரியா - வசந்த் ரவி

ஆண்ட்ரியாவுக்கு துணிச்சலான பெண் பாத்திரம். அவருக்கு ஜோடியாக வசந்த் ரவி நடித்துள்ளார்.

ஜே.எஸ்.கே. பிலிம் கார்பொரேஷன்ஸ் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரித்துள்ள 'தரமணி' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நாளை மறுநாள் ஆகஸ்ட் 11-ல் வெளியாகிறது தரமணி.

English summary
Director Ram's 3rd directorial Taramani will hit the screens on August 11th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X