twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படுபாவிகளா.. கடந்த 10 வருசத்துல கொஞ்சநஞ்சமாவா அநியாயம் பண்ணிவச்சிருகீங்க.. பிரபல இயக்குநர் காட்டம்!

    |

    சென்னை: வெயில் கொடுமை மற்றும் கொரோனா பரவல் என ஏகப்பட்ட இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற ஏகப்பட்ட பிரபலங்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை ஆளப் போகும் தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2021..வரிசையில் நின்று வாக்களித்த திரைப்பிரபலங்கள் ! தமிழக சட்டமன்ற தேர்தல் 2021..வரிசையில் நின்று வாக்களித்த திரைப்பிரபலங்கள் !

    இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அதிமுக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பதிவிட்டுள்ள வெளிப்படையான ட்வீட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    வீட்டில் இருக்க விடுமுறை இல்லை

    வீட்டில் இருக்க விடுமுறை இல்லை

    ஜனநாயக கடமையான வாக்கை செலுத்தத் தான் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஜாலியாக பொழுதை கழித்து விடலாம் என்றும், வெயிலில் சென்று, கூட்டத்தில் நின்று எல்லாம் எப்படி வாக்களிப்பது என்று வீட்டில் இருக்க வேண்டாம். வயதான பல எளிய மக்களே ஓட்டுப் போட வரிசையில் காத்து நிற்கின்றனர். ஸோ கிளம்புங்க!

    கவனம் ஈர்க்கும் பிரபலங்கள்

    கவனம் ஈர்க்கும் பிரபலங்கள்

    காலை 7 மணிக்கு வாக்கு மையங்களில் மக்கள் வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் அருகே செல்ஃபி எடுக்க வந்த நபரின் செல்ஃபோனை அஜித் பறித்த வீடியோ வைரலானது. அதே போல வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளிலேயே நடிகர் விஜய் வந்து ஓட்டுப் போட்டதும் வைரலானது. சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் சிரித்துக் கொண்டே செல்ஃபிக்களையும் எடுத்துக் கொண்டார்.

    படுபாவிகளா

    படுபாவிகளா

    விஜய்சேதுபதியின் புரியாத புதிர், ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகச் சோம்பேறி என்னையவே ஓட்டு போட காலைல வெள்ளனா எந்திரிக்க வச்சிட்டீங்களேடா., கடந்த பத்து வருசத்துல கொஞ்சநஞ்சமாவா அநியாயம் பண்ணிவச்சிருகீங்க., படுபாவிகளா ,இந்தா வர்றேன்டி மாப்ளைகளா #TNAssemblyElection2021 என பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    கடமை

    கடமை

    மேலும், மாஸ்க் அணிந்து ஓட்டுப் போட்ட விரலுடன் போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஞ்சித் ஜெயக்கொடி., "இதெல்லாம் பெருமையா.,? கடமை'யா கடமை" என்றும் கேப்ஷன் கொடுத்து தனது ரசிகர்களை ஓட்டுப் போட தூண்டியுள்ளார்.

    கருப்பு சிவப்பு ஹெல்மெட்

    கருப்பு சிவப்பு ஹெல்மெட்

    தனது பைக்கில் சாய்ந்தபடி நின்று போஸ் கொடுத்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியை பார்த்த நெட்டிசன்கள், அந்த கருப்பு சிவப்பு ஹெல்மெட்டே காட்டுகிறது. நீங்க எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டுருக்கீங்கன்னு கமெண்ட் செய்து வருகின்றனர். அதிமுகவின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக ரஞ்சித் ஜெயக்கொடி வெளிப்படையாகவே பொங்கி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    Ispade Rajavum Idhaya Raniyum director Ranjit Jeyakodi slams ADMK rule in his twitter page after cast his vote.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X