»   »  கபாலி ரிலீஸ் எப்போது? இயக்குநர் ரஞ்சித் தகவல்!

கபாலி ரிலீஸ் எப்போது? இயக்குநர் ரஞ்சித் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி படம் வரும் மே இறுதி அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தகவலை இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


கலைப்புலி தாணு தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.


ரஞ்சித் பேட்டி

ரஞ்சித் பேட்டி

இந்நிலையில், 'கபாலி' படத்தில் இன்னுமிருக்கும் பணிகள் மற்றும் படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ரஞ்சித் கூறுகையில், "ரஜினி சாரின் ஒத்துழைப்பால் மிகவும் சீக்கிரமாகவே இப்படத்தை முடித்துவிட்டோம்.


பேட்ச் ஒர்க்

பேட்ச் ஒர்க்

இன்னும் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருக்கிறது. பேட்ச் ஒர்க் மாதிரி வேலைகள்தான் அவை. தற்போது எடிட்டிங் பணிகள் போய் கொண்டுள்ளன.
டப்பிங்

டப்பிங்

அடுத்த மாதம் முதல் டப்பிங் பணிகளைத் துவங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். டப்பிங் பணிகள் துவங்கியவுடன் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு பணிகள் குறித்து முடிவு செய்வோம்.
நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் படம் அமையும். ரஜினி சாருடன் பணியாற்றியது எங்களுக்கே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனை படம் பார்க்கும் ரசிகர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன்.


வெளியீடு

வெளியீடு

மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் படத்தை வெளியிடும் நோக்கில் வேலைகள் நடந்து வருகின்றன," என்றார்.


English summary
Pa Ranjith, director of Rajini's Kabali revealed the releasing date of Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil