Don't Miss!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- News
88 கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.3 கோடி மானியம்! தஞ்சை அரண்மனை அறங்காவலரிடம் காசோலை தந்த முதல்வர்!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்யை வைத்து ரங்கஸ்தலம் மாதிரி பக்கா கிராமத்து கதையை இயக்கணும்.. குலுகுலு இயக்குநரோட ஆசைய பாருங்க!
சென்னை :மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் ரத்னகுமார்.
இன்றைய தினம் சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள குலுகுலு படம் ரிலீசாகியுள்ளது.
நாடோடி பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
பகத்
பாசில்
கேரக்டருக்கு
ரீப்ளேஸ்மெண்ட்டே
கிடையாது..
இயக்குனர்
ரத்னகுமார்!

இயக்குநர் ரத்னகுமார்
ஆடை, மேயாத மான் போன்ற படங்களை இயக்கி அதன்மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ரத்னகுமார். இவரின் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குலுகுலு படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல சிலம்பம் மாஸ்டரின் மகன்.

சிலம்பம் மாஸ்டர்
இவரது அப்பா ராமராஜன் முதல் சிம்பு வரை சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறாராம். தன்னுடைய அப்பாவையும் குலுகுலு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். தற்போது குலுகுலு படத்திற்கு நல்ல ரெவ்யூஸ் கிடைத்துவருவது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ரத்னகுமார்.

மாஸ்டர் படத்தில் ரத்னகுமார்
முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக ரத்னகுமார் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து படத்தின் வெளியீட்டின்போது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த ரத்னகுமார் விஜய் சார் படத்தில் தன்னுடைய பெயர் இடம்பெறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

கைகொடுத்த அனுபவம்
விக்ரம் படத்திலும் இவர் பணியாற்றியுள்ளார். இதனிடையே, மாஸ்டர், விக்ரம் படங்களில் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது என்று ரத்னகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் சீக்குவன்ஸ் எழுதும்போது அந்த அனுபவம் பெரிய அளவில் கைகொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யை இயக்க ஆசை
இந்நிலையில் விஜய்யை வைத்து ரங்கஸ்தலம் போன்ற கலக்கலான கிராமத்து சப்ஜெக்டில் படம் இயக்க விருப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ள ரத்னகுமார் விரைவில் இதற்கான வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ரங்கஸ்தலம் படம்
ராம்சரண், ஆதி, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண் முரட்டு சிங்கிளாக நடித்திருப்பார். பூப்போட்ட சட்டை, லுங்கி சகிதம் அவர் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்தார். சமந்தாவும் சற்றே கருப்பாக, கிராமத்து பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

கிராமத்து கெட்டப்பில் விஜய்?
இந்நிலையில் இதுபோன்ற கெட்டப்பில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்ற ரத்னகுமாரின் ஆசை நிறைவேறினால் அந்தப் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கனவு காண ஆரம்பித்து விட்டனர். முன்னதாக ஏராளமான கிராமத்து சப்ஜெக்ட்களில் நடிகர் விஜய் நடித்துள்ள போதிலும், முரட்டுத்தனமாக கேரக்டரில் அவர் நடித்ததில்லை.