For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அனபெல் சேதுபதி படத்தில் அப்பாவை நடிக்க வைக்க தயக்கம் ... காரணம் இது தான்

  |

  சென்னை : PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் - சுதன் சுந்தரம், G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் "அனபெல் சேதுபது".

  விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

  9 வருஷம் ஆயிருச்சு... நடிகை இலியான பகிர்ந்த பர்ஃபி படத்தின் போட்டோஸ்! 9 வருஷம் ஆயிருச்சு... நடிகை இலியான பகிர்ந்த பர்ஃபி படத்தின் போட்டோஸ்!

  உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.

  R சுந்தர்ராஜன் பேசியதாவது..

  R சுந்தர்ராஜன் பேசியதாவது..

  நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு படத்தின் கதை தெரியாது படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார், சந்தோஷமாக இருந்தது. இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

  தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது....

  தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது....

  தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் AL விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

  நகைச்சுவை பட்டாளம்

  நகைச்சுவை பட்டாளம்

  "அனபெல் சேதுபதி" திரைப்படத்தை PASSION STUDIOS சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ளனர். தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பண்ணு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

  தொழில் நுட்ப கலைஞர்கள்

  தொழில் நுட்ப கலைஞர்கள்

  கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), கிருஷ்ணா கிஷோர் ( இசை ), வினோத் ராஜ்குமார் N (கலை), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பாளர்), தினேஷ் (நடனம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்), N உதய் குமார் (ஒலி கலவை ) Sync Cinemas ( ஒலி அமைப்பு ) R மணிகண்டன் (VFX Supervisor), சந்தோஷ் (ஸ்டில்ஸ்), Tuney John 24 AM (விளம்பர வடிவமைப்பு), K சக்திவேல் (புரடக்சன் எக்ஸியூட்டிவ்), A குமார் (எக்ஸியூட்டிவ் புரடியூசர்),சுரேஷ் சந்திரா மக்கள் தொடர்பு என இந்த டீம் செயல் பட்டு உள்ளது .

  அப்பா நடிக்காதது காரணம்

  அப்பா நடிக்காதது காரணம்

  பொதுவாகவே சிறு வயது முதல் அப்பா பங்கு பெரும் ஷூட்டிங் ஸ்பாட் குடும்பத்துடன் சென்றால், அவர் நடிக்கும்பொழுது கொஞ்சம் கஷ்ட படுவார் .எங்களை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றுவார்.அதன் பின்னர் தான் நடிப்பார் .அதே தயக்கம் தான் எனக்கும் , நான் இயக்கி ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொல்லும் போது அதுவும் அப்பா போன்ற சாதனையாளர்களை இயக்கும் போது ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும் .அது தான் முக்கிய காரணம் அப்பா இந்த படத்தில் நடிகராதது . அப்பாவின் ஆசிர்வாதம் தான் இந்த படத்தில் நான் இயங்கியது .

  English summary
  debutant director and famous actor r.sundarrajan's son deepak sundarrajan had direct vijay sethupathi's annabel sethupathi. in his recent press meet, he revealed that why his father sundarrajan not acting in this movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X