அஜித்தின் தல 61 இசையமைப்பாளர்... டைரக்டர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்

சென்னை : அஜித் நடித்து முடித்துள்ள வலிமை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அஜித், டைரக்டர் ஹச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. இந்த படத்தின் ஷுட்டின் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வலிமை பொங்கல்

வலிமை பொங்கல்

ஆனால் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் வலிமை படம் ரிலீசாக உள்ளதாக போனி கபூர் அறிவித்தார். ஜனவரி 12 ம் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் உறுதியற்ற தகவல் ஒன்றும் வெளியானது. ஆனால் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவதற்குள் அஜித்தின் அடுத்த படமான தல 61 படத்தின் அப்டேட்கள் வர துவங்கி விட்டன. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தல 61 படத்திலும் அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணி தொடர உள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளையும் ஹச்.வினோத் ஏற்கனவே துவங்கி விட்டாராம்.

தல 61 அப்டேட்

தல 61 அப்டேட்

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக தல 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், தல 61 படத்திற்கு அனிருத்தை புக் செய்திருக்கிறார்களாம். வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இது மூன்றாவது முறையாகும்.

அடுத்து தல தீபாவளியா

அடுத்து தல தீபாவளியா

வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதால், இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகே தல 61 படத்தின் ஷுட்டிங்கை துவக்க போகிறார்களாம். அதே போல் 2022 ம் ஆண்டு தீபாவளிக்கு தல 61 படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தல 61 படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளதால் தல 61 ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

தீவிரம் காட்டும் அஜித்

தீவிரம் காட்டும் அஜித்

கடந்த 2 ஆண்டுகளாக அஜித் படம் எதுவும் ரிலீசாகவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆனால் இனி ரசிகர்களை இதுபோல் காக்க வைக்கக் கூடாது என அடுத்தடுத்த படங்களில் நடிக்க அஜித் தீவிரம் காட்டி வருகிறாராம். தனது அடுத்த படங்களின் வேலைகளை விரைந்து முடிக்கும் படி டைரக்டர்களிடம் கேட்டு வருகிறாராம் அஜித்.

தல 62 திட்டம் தயார்

தல 62 திட்டம் தயார்

தல 61 படத்தில் முடித்த கையோடு தல 62 படத்தின் வேலைகளை துவக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தல 62 படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இருந்தாலும் தல 61 படத்தை நிறைவு செய்த பிறகே தல 62 பற்றி அஜித் முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X