SA Chandrasekhar: விஜய் இல்லாமல் நடந்த கிரகப்பிரவேசம்.. டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் புது வீடுகட்டி உள்ளார். அதன் கிரகபிரவேஷம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். 1978 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சை குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக எஸ்ஏ சந்திரசேகர் அறிமுகமானார். அதன் பின், 1981ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தை வைத்து, சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கிநார். இந்த படம் தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி அதிகபடியான வசூலை அள்ளியது. அந்த படத்தின் மூலம் விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நபர்களாக மாறினார்கள்.

Vijay S A Chandrasekhar Shoba

ஏஸ்.ஏ.சந்திரசேகர்: சட்டம் ஒரு இருட்டறை படத்தை தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், பட்டணத்து ராஜாக்கள், இதயம் பேசுகிறது, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், புது யுகம், நான் சிகப்பு மனிதன், நீதியின் மறுபக்கம், எனக்கு நானே நீதிபதி, வசந்த ராகம், நிலவே மலரே, சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என அடுத்தடுத்து வெற்றி படத்தை கொடுத்த ஏஸ்.ஏ.சந்திர சேகர், தனது மகனை நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதன்பின் தனது மகனை வைத்து தேவா, மாண்புமிகு மாணவன், பெரியண்ணா, தோஸ்த் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் பெரியண்ணா படத்தில் விஜய்காந்துடன் விஜய் சேர்ந்து நடித்தார். அந்த படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

திறமையான இயக்குநர்: அடுத்தடுத்து படத்தை இயக்கி வந்த ஏஸ்.ஏ.சந்திர சேகர் 2019ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாறி என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடித்த நான் கடவுள் இல்லை என்ற படத்தை கடைசியான இயக்கினார். எஸ்.ஏ. சந்திரசேகர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் கலந்து கொள்ளவில்லை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா, பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல், பல படங்களை தயாரித்து, கதைகளையும் எழுதியுள்ளார். இவர்களின் மகனான நடிகர் விஜய்யுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உறவு சரியாக இல்லை என தகவல் பரவி வருகிறது. இதனால் ஷோபாவும் எஸ்ஏ சந்திரசேகரும் தனியாகதான் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,எஸ்.ஏ.சந்திரசேகரின் புது வீட்டு கிரகப்பிரவேசம் இன்று நடந்துள்ளனது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. கிரகப்பிரவேசத்தில் பல உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால்,ஒரே மகனான விஜய்யும் கலந்து கொள்ளவில்லை, விஜய்யின் மனைவி சங்கீதா, பேரக்குழந்தைகள் என யாருமே வரவில்லை. ஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவர் மட்டுமே உறவினர்களுடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் வந்து வாழ்த்தினாலும், அது மகன் வந்ததுபோல ஆகுமா என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vijay shoba விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X