»   »  உங்க சோலியை முதலில் பாருங்க, டூ மச்: நடிகர் ஜெய்யை விளாசிய இயக்குனர்

உங்க சோலியை முதலில் பாருங்க, டூ மச்: நடிகர் ஜெய்யை விளாசிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் பண்றது ஓ.கே..மொதல்ல நீங்க நடிச்ச படங்களுக்கு பண்ணுங்க என இயக்குனர் சக்திவேல் நடிகர் ஜெய்யை விளாசியுள்ளார்.

ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தோசை சேலஞ்ச் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அனைவரையும் தங்களின் அன்பானவர்களுக்கு தோசை சுட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளது.

இதையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தோசை சுடத் துவங்கியுள்ளனர்.

வெங்கட் பிரபு

சூர்யாவை வைத்து படம் எடுத்த வெங்கட் பிரபு தோசை சவாலை ஏற்று தோசை சுட்டார். பின்னர் நடிகர் ஜெய்யை தோசை சவாலை ஏற்கும்படி கூறினார்.

ஜெய்

வெங்கட் பிரபு கூறியதை அடுத்து ஜெய் தோசை சுட்டு அதை தனது காதலி அஞ்சலிக்கு கொடுத்துள்ளார். இதை புகைப்படம் எடுத்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

@Actor_Jai @yoursanjali : மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் பண்றது ஓ.கே..மொதல்ல நீங்க நடிச்ச படங்களுக்கு பண்ணுங்க.. தயாரிப்பாளர்களை ஆதரியுங்கள் ப்ரோ என இயக்குனர் சக்திவேல் ட்வீட்டியுள்ளார்.

டூ மச்

சக்திவேல் கூறியது சரி என்று ஒருவர் தெரிவிக்க அதை பார்த்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆமாம் பிரதர்... டூ மச்... அவரது படங்களின் வியாபாரம் பற்றி அவருக்கு தெரியவில்லை.. அவர் பாடம் கற்க வேண்டும்..#nobusinessatall

English summary
Director Sakthivel has blasted actor Jai on twitter asking him to promote his films first than promoting others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil