»   »  ‘நீதான் என் குட்டிக் கங்காரு’... பாராட்டிய சாமி... பிரியங்கா ஹேப்பி அண்ணாச்சி!

‘நீதான் என் குட்டிக் கங்காரு’... பாராட்டிய சாமி... பிரியங்கா ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி இயக்கத்தில் அர்ஜூனா நாயகனாக நடித்துள்ள படம் கங்காரு. இப்படத்தில் அவரது தங்கையாக பிரியங்காவும், நாயகியாக வர்ஷா அஸ்வதியும் நடித்துள்ளார்.

மேலும் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்குனர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘கங்காரு' படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

ஏற்கனவே, உயிர், மிருகம் உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் சாமி. ஆனால், இப்படத்தில் முழுக்க முழுக்க அண்ணன் - தங்கைப் பாசத்தை மையப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குட்டி கங்காரு...

குட்டி கங்காரு...

இப்படத்தில் நாயகனின் தங்கையாக நடித்துள்ள பிரியங்கா, கதாபாத்திர தேர்வுக்காக நடித்த போதே, கிளிசரின் இல்லாமல் அழுது சாமியின் பாராட்டை வாங்கி விட்டாராம். அப்போதே, ‘நீ தான் குட்டி கங்காருவா நடிக்கிறே' என சாமி கூறிவிட்டாராம்.

முள்ளும் மலரும் மாதிரி...

முள்ளும் மலரும் மாதிரி...

படத்தில் தங்கை கேரக்டர் தான் என்றாலும், அது முள்ளும் மலரும் படத்தில் ஷோபா நடித்ததைப் போல் பவராக இருக்கும் என சாமி கூறினாராம். அதனால், தங்கையாக நடிக்காதே என்ற தோழிகளின் அறிவுரையை மீறி இப்படத்தில் பிரியங்கா நடித்துள்ளாராம்.

தேசிய விருது...

தேசிய விருது...

படப்பிடிப்பில் ஒருநாள் பிரியங்கா நடித்த ஒரு காட்சியைப் பார்த்து, ‘நான் எதிர் பார்த்ததை விட நல்லா பண்ணிட்டே' என சாமி பாராட்டினாராம். ‘தனக்கு அப்போதே தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சி. படத்தின் வெற்றி அடுத்த விருதாக அமையும் என்று நம்புகிறேன்' என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

பிரியங்கா ஏற்கனவே அகடம் என்ற கின்னஸ் சாதனைப் படத்தில் நடித்தவர். இந்நிலையில் கங்காரு படமும் தனக்கு தமிழில் நடிப்புக்காக நல்ல பெயரை வாங்கித் தரும் என பிரியங்கா நம்புகிறாராம்.

English summary
Kangaroo is a Upcoming Tamil Movie. Directed by Samy and produced as Suresh Kamatchi.Arjuna, Varsha Ashwathi, Priyanka, Thambi Ramaiah, Ganja Karuppu Starring this Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil