»   »  எழுதி வச்சுக்கோங்க...2 வருடத்தில் விக்ராந்த் மிக முக்கியமான நடிகர் - பாலா பாராட்டு!

எழுதி வச்சுக்கோங்க...2 வருடத்தில் விக்ராந்த் மிக முக்கியமான நடிகர் - பாலா பாராட்டு!

Posted By: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி இயக்கிய தொண்டன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, படத்தில் நடித்த நடிகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டர்.

இயக்குநர் சமுத்திரகனி, அப்பா திரைப்படத்துக்கு பிறகு சமூக அக்கறைகொண்ட இயக்குநர் என்கிற பெயரை சம்பாதித்துள்ளார். அவர் இயக்கிய தொண்டன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா உள்பட பலர் கலந்துகொண்டர்.

Director Samuthrakani's thondan audio release launch function

விழாவில் பேசிய பாலா இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனைப் பார்த்தால் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர் போல் இருக்கிறார். ஆனால் நன்றாக பாடல்களைக் கொடுத்துள்ளார். இந்தப் டத்தில் நடித்துள்ள விக்ராந்த் இன்னும் இரண்டு வருடங்களில் மிகச் சிறந்த நடிகனாக உருவெடுப்பார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என விக்ராந்தை மேடையில் அவர் அருகில் நிற்க வைத்து நம்பிக்கை வார்த்தை பேசியதில் விக்ராந்த் குளிர்ந்து போனார்.

கஞ்சா கருப்பு குறித்து பேசிய பாலா, தம்பி உன்னையை யார் படம் தயாரிக்கச் சொன்னது? இனியாவது புத்தியாகப் பிழைத்துக்கொள் என மேடையில் கூறியபோது, பாலா ஒரு அட்வைஸர் போல என நினைக்க வைத்தார்.

தொண்டன் இடையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, இந்தப் படத்தில் ஒரு பாடலை திரையில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கவிஞர் யுகபாரதி எழுதினார். அப்பாடல் மிக அருமையாக வந்துள்ளது என கூறினார்.

English summary
Thondan director samuthrakani's new movie audio launched. In that function including Director Bala many personalities an film fame people participated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil