»   »  விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் சித்தார்த்தை இயக்கும் சசி

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் சித்தார்த்தை இயக்கும் சசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசி இயக்கத்தில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.

'சொல்லாமலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சசி. தொடர்ந்து 'ரோஜாக்கூட்டம்', 'பூ', 'டிஷ்யூம்' போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

Director Sasi's next Movie Details

பரத்தை வைத்து சசி இயக்கிய 'ஐந்து ஐந்து ஐந்து' மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் விஜய் ஆண்டனியை வைத்து சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் 'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து சசி இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இருவரும் சசியின் அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ்- சித்தார்த் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Confirmed: Director Sasi Team Up with Siddharth, G.V.Prakash for His Next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil