சீனு ராமசாமி இயக்கத்தில் சில்வர் ஜூப்ளி நாயகன்… கம்பேக் கொடுக்க காத்திருக்கும் மைக் மோகன்

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான மாமனிதன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்போது சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படமும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சீனு ராமசாமியின் அடுத்த படம் குறித்தும் அதில் யார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

மண்ணின் இயக்குநர் சீனு ராமசாமி

மண்ணின் இயக்குநர் சீனு ராமசாமி

2007ல் வெளியான கூடல் நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது வென்று அசத்தியது. அதன் பின்னர் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் என மண்ணின் யதார்த்தமான மக்கள் சார்ந்த கதைகளை இயக்கி கவனம் ஈர்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான சீனு ராமசாமியின் 'மாமனிதன்' பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விரைவில் புதிய படம்

விரைவில் புதிய படம்

2013ல் சீனு ராமசாமி இயக்கியிருந்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், விரைவில் அது ரிலீஸாக உள்ளது. இதனிடையே ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'இடிமுழக்கம்' படத்தையும் இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் சீக்கிரம் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், சீனு ராமசாமியின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் கிடைத்த தகவலின் படி, மெஹந்தி சர்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் சீனு ராமசாமியின் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

சில்வர் ஜூப்ளி ஹீரோ

சில்வர் ஜூப்ளி ஹீரோ

அழகான காதலை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை, பாண்டிச்சேரியைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் சில்வர் ஜூப்ளி ஹீரோவான மைக் மோகன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் - சீனு ராமசாமி கூட்டணியில் மோகன் இணைகிறாரா அல்லது இது புதிய படமா என இதுவரை தெரியவில்லை. இருப்பினும் மோகன் - சீனு ராமசாமி கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.

மண்ணின் மைந்தனாக மோகன்

மண்ணின் மைந்தனாக மோகன்

1980களில் சில்வர் ஜூப்ளி நாயகனாக கலக்கியவர் மோகன். இளையராஜாவின் இசைக்கும் எஸ்பிபியின் குரலுக்கும் உருவம் கொடுத்து திரையில் உலவ விட்டால் அங்கே மோகன் தான் தெரிவார். அப்படி இளையராஜாவின் இசைக்கு உயிர் கொடுத்து உன்னதமான கலைஞனான மோகன், 14 வருடங்களுக்குப் பிறகு 'ஹரா' என்ற படத்தில் நடித்துள்ளார். நடித்தால் ஹீரோ தான் என உறுதியாகவுள்ள மோகன், சீனு ராமசாமியுடன் கூட்டணி வைக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் மைக்குடன் வலம் வரும் மோகன், சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்தால் அது வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X