»   »  பொய் குற்றச்சாட்டு.. தற்கொலை நாடகம்... நடிகை அதிதி மீது அறிமுக இயக்குநர் புகார்!

பொய் குற்றச்சாட்டு.. தற்கொலை நாடகம்... நடிகை அதிதி மீது அறிமுக இயக்குநர் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை அதிதி பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி தற்கொலை நாடகமாடுவதாக அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செல்வகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Director Selvakannan levels allegation on actress Aditi

நான், நெடுநல்வாடை என்ற படத்தை இயக்கி வருகிறேன். இதில், கதாநாயகியாக அதிதியை அறிமுகப்படுத்தினேன். முதல்கட்ட படப்படிப்பு முடிந்ததும், பட்டதாரி என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

என் படம் முடியாமல் இருந்தபோதும், அந்த படத்தில் நடிக்க அவரை அனுமதித்தேன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது உடல்ரீதியாக சோர்ந்துபோய் பலவீனமாக இருந்தார். காட்சிகளில் ஈடுபாடின்றி நடித்தார்.

இரவு நீண்டநேரம் தூங்காமல் போனில் பேசிவிட்டு, காலையில் படப்பிடிப்புக்கு கண் வீங்கி வந்தார். இதனால், அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பட்டதாரி படத்தில் தன்னுடன் கதாநாயகனாக நடிக்கும் அபிசரவணனுடன் தொடர்பு இருப்பதாகவும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும், படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல் நடித்து முடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

Director Selvakannan levels allegation on actress Aditi

ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை. படப்பிடிப்புக்கு வராமல் மாயமாகிவிட்டார். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையும் நடந்தது. எதற்கும் ஒத்துழைக்கவில்லை.

அபிசரவணனுடனான மறைமுக காதல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக என் மீது நான் அவரை திருமணம் செய்ய வற்புறுத்தினேன் என்றும், தவறாக நடக்க முயன்றேன் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்கொலை நாடகம் நடத்துகிறார். இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Read more about: aditi அதிதி
English summary
Nedunavaadai director Selvakannan has alleged actress Aditi for malicious complaints against him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil