"பொண்டாட்டிகிட்ட தோத்து போ வாழ்க்கையில் ஜெயிப்பாய்" செல்வமணி ஸ்பீச்,ரஜினி கைதட்டியது நினைவு இருக்கா?
சென்னை: "பொண்டாட்டிகிட்ட தோத்து போ வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிப்பாய்" என்று செல்வமணி சொன்னதற்கு ரஜினி இரண்டு கைகளை தூக்கி கைதட்டியது யாராலும் மறக்க முடியாது.
பொதுவாக கணவன் மனைவி என்று வந்துவிட்டால் அந்த உறவுக்கு நடுவில் பலவிதமான சிக்கல்களும் குழப்பங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாட வாழ்க்கையில் கணவன் மனைவி பிரச்சனை என்பது காலம் காலமாக யாரையும் விட்டு வைக்கவில்லை.
விட்டுக்கொடுத்து போவது மட்டும் தான் இதற்கு தீர்வு என்று பல கணவன்மார்களும் மனைவிமார்களும் வயதில் அனுபவமிக்க தம்பதியர்கள் பலரும் திருமண வாழ்க்கை வெற்றிகளைப் பற்றி பலமுறை சொல்லி உள்ளார்கள்.

பொக்கிஷமான ஸ்டேட்மெண்ட்ஸ்
சன் டிவி மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரோஜா பற்றி அவரது கணவர் செல்வமணி சொல்லிய விஷயங்கள் இந்த தருணத்தில் குறிப்பாக தனுஷ் ஐஸ்வர்யா தங்களது பிரிவை இந்த உலகத்திற்கு சொல்லிய இந்த வேளையில் செல்வமணி சொன்ன அந்த பொக்கிஷமான ஸ்டேட்மெண்ட்ஸ் அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த கருத்தை வரவேற்று ஆமோதித்து கைதட்டி சிரித்து தன் ஆதரவை வெளிப்படுத்தினார்.

மிக சிறந்த உதாரணமாக
அருகில் இருந்த லதா ரஜினிகாந்த் , அவர் கைதட்டியதை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்து அவரும் அவருடன் சேர்ந்து சிரித்தார். இந்த நிகழ்வு சோஷியல் மீடியா மற்றும் பல தொலைக்காட்சிகளில் , பத்திரிகைகளில் மிக முக்கியமான ஒரு செய்தியாக அப்பொழுது பார்க்கப்பட்டது .அன்று முதல் இன்று வரை கணவன் மனைவி உறவுக்கு மிக சிறந்த உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பொறுமையாகவும் சாந்தமாகவும் எத்தனையோ பிரச்சினைகளை மனதில் தாங்கிக் கொண்டு தன் குடும்ப வாழ்க்கையை ஆணிவேராக நினைத்து மனைவி மக்கள் என்று இன்புற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வீ சேகர் இயக்குனர் சொல்லிக்கொடுத்த...
இயக்குனர் வீ சேகர் இயக்குனர் செல்வமணிக்கு சொல்லிக்கொடுத்த மிக அற்புதமான பாடம்தான் "மனைவியிடம் தோற்றுப்போ நீ வாழ்க்கையில் ஜெயிப்பாய்" என்ற இந்த வேத வாக்கை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் மகள் விவாகரத்து இந்த நிகழ்வை ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டிய ஒரு கட்டாயமாகும்.
Recommended Video

தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ்
மேடையில் பேசிய செல்வமணி மிக முக்கியமாக வாழ்க்கையின் தாத்பரியம் என்னவென்றால் "நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ இல்லாமல் வாழ்ந்தால் குடும்பம் வெற்றிபெறும்" அதேபோல் சினிமா என்று எடுத்துக்கொண்டால் இயக்குனர் பெரிய ஆளா நடிகர் பெரிய ஆளா என்ற ஈகோ இருக்கக் கூடாது என்று ஒரு சிறந்த உதாரணத்தை முன்வைத்தார். இதை கேட்டு ரசித்த பல பிரபலங்கள் அந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்து இருந்தனர். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , லதா ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், என்று அனைவரும் இயக்குனர் செல்வமணி பேசிய இந்த விழாவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











