Don't Miss!
- News
தயங்கி நிற்காமல் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துங்க! மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
- Lifestyle
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
- Sports
பேட்டிங் வேண்டுமா? பவுலிங் வேண்டுமா?.. நியூசி, உடனான டி20 தொடர்.. தர்ம சங்கடத்தில் ஹர்திக் பாண்ட்யா
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Finance
2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி காலி.. அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே..என்ன பிரச்சனை?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஒழுக்கத்த விட்டோம்னா அவ்வளவுதான்...செல்வராகவனின் அடுத்த அதிரடி.. பகாசூரன் டிரைலர் !
சென்னை: மோகன் ஜி இயக்கத்தில், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பகாசூரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.
கதையின்
அவுட்லைன்
கேட்டாலே
போதும்..நம்பி
நடிக்கலாம்..செல்வராகவன்,
மிஷ்கினை
புகழ்ந்த
எஸ்.ஜே.சூர்யா!

செல்வராகவன் நடிகரான கதை
திரைக்குப்பின்னால் நடிகர்களை வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொலை,ரத்தக்களறி, பகை, பழிவாங்குதல் என வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

விமர்சனங்களில் சிக்கினார் மோகன் ஜி
சாணிக்காயிதம் திரைப்படத்தை அடுத்து இயக்குநர் செல்வராகவன் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இவர் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களை இயக்கி உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வியாபார ரீதியாக இத்திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் இந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன.

பூசாரி கெட்டப்பில்
பகாசூரன் என வித்தியான தலைப்பு வைத்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில், செல்வராகவன் நெற்றியில் பட்டை, குங்குமம், கழுத்தில் ருத்ராட்சை மாலை என கோவில் பூசாரி போல மிரட்டலாக இருந்தார். அவரை மக்கள் கையெடுத்து கும்பிடுவது போல போஸ்டர் வெளியானது. பூசாரி கெட்டப்பில் செல்வராகவனை பார்த்த ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பகாசூரன் டிரைலர்
இந்நிலையில், பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிராக சமூதாயத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்தும், பெண்கள் ஒரு போகப்பொருளாக பார்க்கும் இந்த சமூதாயத்தின் அழுக்கை அகற்ற பகாசூரனாக கத்தியோடு களமிறங்கி உள்ளார் செல்வராகன். கள்ளக்காதல் என்று கேவலப்படுத்தக்கூடாது...திருமணம் தாண்டிய புனிதமான உறவு சர்ச்சைக்குரிய வசனங்களுடன் பகாசூரன் டிரைலர் வெளியாகி உள்ளது.