twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎப் 2 படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்... பெரியப்பா அனுபவத்திற்கு நன்றியும் சொல்லியிருக்காரு!

    |

    ஐதராபாத் : யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ல் கோடைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியானது கேஜிஎப் சாப்டர் 2. இந்தப்படம் இந்திய அளவில் மட்டுமே 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

    தொடர்ந்து வசூலை தொடர்ந்து வருகிறது கேஜிஎப் 2. இதையடுத்து படம் 1400 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

    குறிப்பாக இந்தி ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஆர்ஆர்ஆர் படம் மற்றும் அதன் பிரம்மாண்டத்தையும் இந்தி ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    தனுஷுக்கு வந்த புது சிக்கல்… தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் முடக்கம்!தனுஷுக்கு வந்த புது சிக்கல்… தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் முடக்கம்!

    கேஜிஎப் சாப்டர் 2 படம்

    கேஜிஎப் சாப்டர் 2 படம்

    நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டன்டன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஏப்ரல் 14ல் கோடைக் கொண்டாட்டமாக வெளியான கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். படம் சர்வதேச அளவில் வெளியாகி அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

    மிரட்டலான அனுபவம்

    மிரட்டலான அனுபவம்

    முன்னதாக வெளியான கேஜிஎப் படமும் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதையடுத்து படத்தை ரசிகர்களும் கொண்டாடினர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கேஜிஎப் சாப்டர் 2 படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மூன்றாவது பாகம் எப்போது துவங்கப்படும் என்று அவர்கள் தற்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மிரட்டிய வில்லன் நடிகர்

    மிரட்டிய வில்லன் நடிகர்

    படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான அனுபவத்தை பிரஷாந்த் நீல் கொடுத்திருந்தார். அதேபோல காட்சிகளை சரியாக உள்வாங்கி யஷ் மட்டுமில்லாமல் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர். சஞ்சய் தத்தும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார்.

    இயக்குநர் ஷங்கர் பாராட்டு

    இயக்குநர் ஷங்கர் பாராட்டு

    இந்தப் படம் பிரபலங்களின் பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். கேஜிஎப் படத்தை பார்த்ததாகவும் படத்தின் கதை, திரைக்கதை, எடிட்டிங் போன்ற அனைத்தும் வியப்பை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பெரியப்பா அனுபவம்

    பெரியப்பா அனுபவம்

    மேலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள், வசனங்கள் மிகவும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாகவும், ஹீரோ யஷ்ஷை மாசாக காட்டியிருந்ததும் படத்தில் சிறப்பாக இருந்ததாகவும் கூறிய ஷங்கர், படத்தில் பெரியப்பா அனுபவத்தை தந்த இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ஷங்கர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

    படக்குழுவிற்கு ஷங்கர் வாழ்த்து

    படக்குழுவிற்கு ஷங்கர் வாழ்த்து

    படத்தில் ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவின் உழைப்பும் வெறித்தனமாக இருந்ததாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். படத்தில் இடம்பெற்ற பெரியப்பா காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒற்றை தங்கக்கட்டியை மீட்க அவர் போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியை வைத்து துவம்சம் செய்யும் காட்சி மிகவும் மாஸாக அமைந்தது. இதைக் குறிப்பிட்டே ஷங்கர் தற்போது ட்வீட் செய்துள்ளார்.

    பிரஷாந்த் நீல் நன்றி

    பிரஷாந்த் நீல் நன்றி

    இந்நிலையில் ஷங்கரின் இந்த பாராட்டிற்கு கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் நன்றி தெரிவித்துள்ளார். பெரிய மாஸ்டரிடம் இருந்து இந்தப் பாராட்டை பெறுவது மேலும் சிறப்பாக உணர வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கேஜிஎப் 3 குறித்து அவர் புதிய அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ஆர்சி15 படத்தை இயக்கும் ஷங்கர்

    ஆர்சி15 படத்தை இயக்கும் ஷங்கர்

    இந்தியன் 2 படத்தை இயக்கிவந்த நிலையில் சில தவிர்க்க முடியாத சூழலில் இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரணின் ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    English summary
    Director Shankar lauds KGF chapter 2 movie and its team
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X