twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் இருக்கேன்..போனால் என் தலைதான் போகும்..லிங்குசாமியை நினைத்து நெகிழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

    |

    சென்னை : லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் 'தி வாரியர்' திரைப்படம் ஜூலை 14ந் தேதி வெளியாக உள்ளது.

    Recommended Video

    The Warrior | Ilaiyaraaja MP கலாய்த்த Parthiban

    தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினினேனி ஹீரோவாக நடிக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர் ஆதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். நதியா, பாரதிராஜா,அக்ஷரா கெளடா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    தி வாரியர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர், எனது நெருங்கிய நண்பர் லிங்குசாமி, அவரை நினைத்து பெருமை அடைவதாக பேசினார்.

    Chiyaan Vikram -க்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..மாரடைப்பா? Chiyaan Vikram -க்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..மாரடைப்பா?

    "தி வாரியர்"

    தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம் பொத்தினேனி. இவர் முதல் முறையாக தமிழ் இயக்குநருடன் இணைந்து "தி வாரியர்"என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா தித்தூரி தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பொருத்தமான பெயர்

    பொருத்தமான பெயர்

    இந்நிலையில், நேற்று தி வாரியர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் ஷங்கர், வாரியர் என்ற பெயர் இந்த படத்திற்கு பொருத்தமான பெயர். நாம் எல்லோருமே எதற்காகவோ போராடிக்கொண்டே இருப்பதால் நாம் அனைவருமே வாரியர்கள் தான். படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு படம் வித்தியாசமாக இசையமைக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் வரும் புல்லட்டு சாங் நன்றாக வந்திருப்பதாக கூறினார்.

    நான் இருக்கேன் கவலைப்படாதீங்க

    நான் இருக்கேன் கவலைப்படாதீங்க

    தொடர்ந்து பேசிய ஷங்கர், கொரோனா சமயத்தில் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தது. பெரிய சிக்கலில் மாட்டியிருந்தேன். எல்லா பிரச்சனைகளையும் அவரிடம் நான் சொல்லுவேன். நீங்க கவலைப்படாதீங்க சார், உங்களுக்கு முன்னால நான் இருக்கேன், போனால் முதல்ல என் தலைதான் போகும் என்று சொன்னார். அந்த நட்பிற்கு நன்றி லிங்கு. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.

    கதறி அழுத லிங்கு

    கதறி அழுத லிங்கு

    இந்த நிகழ்ச்சியில், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ஷங்கர், சிவா, பார்த்திபன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய லிங்குசாமி, கார் , வீடு எது வேண்டுமானாலும் போகட்டும் ஆனால்,தன்னிடம் இருக்கும் நட்பை நினைத்து பெருமைப்படுவதாக லிங்குசாமி கண்ணீருடன் பேசினார்.

    English summary
    director shankar emotional speech on The warrior press meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X