லைகா உரிமையாளரை நேரில் சென்று சந்தித்த ஷங்கர்.... அப்புறம் என்னாச்சு ?

சென்னை : இந்தியன் 2 விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லைகா உரிமையாளர் சுபாஸ்கரனை நேரில் சந்தித்து பேசி உள்ளார் டைரக்டர் ஷங்கர். இந்த தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பல காரணங்களால் அடுத்தடுத்து இந்த படம் தள்ளி போய் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது க்ரேன் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் முடிவதற்குள் கொரோனா பரவல், லாக்டவுன் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

படங்களை அறிவித்த ஷங்கர்

படங்களை அறிவித்த ஷங்கர்

லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைப்பதற்குள் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்தியன் 2 படம் தாமதமானதால் ராம் சரணை வைத்து ஆர்சி 15, ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் அந்நியன் ரீமேக் உள்ளிட்ட படங்களை அறிவித்தார் ஷங்கர்.

வழக்கு போட்ட லைகா

வழக்கு போட்ட லைகா

இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என கோர்ட்டில் தடை கேட்டது லைகா. ஆனால் இந்தியன் 2 தாமதத்திற்கு லைகா தான் காரணம் என ஷங்கர் தரப்பிலும் பல வழக்குகள் தொடரப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், லைகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, ஷங்கர் மற்ற படங்களை இயக்க கோர்ட் அனுமதி அளித்தது.

சமரச முயற்சியில் கமல்

சமரச முயற்சியில் கமல்

முடிவுக்கு வராமல் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இரு தரப்பினரிடையே சமரசம் பேசி மீண்டும் இந்தியன் 2 ஷுட்டிங்கை துவங்க கமலும் இந்த விவகாரத்தில் தலையிட்டு வருகிறார். ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை தனித்தனியாக அழைத்து கமல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

ஷங்கரை அழைத்த சுபாஸ்கரன்

ஷங்கரை அழைத்த சுபாஸ்கரன்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லைகா ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன் தற்போது இந்தியா வந்துள்ளார். வந்த கையோடு ஷங்கரையும், அவரது மனைவியையும் வீட்டிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கிட்டதட்ட ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாம்.

வழக்குகள் அனைத்தும் வாபஸா

வழக்குகள் அனைத்தும் வாபஸா

பேச்சுவார்த்தையின் முடிவில், லைகா மீது தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற ஷங்கர் ஒப்புக் கொண்டாராம். இதனால் இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் 60 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டதால், அடுத்த சில மாதங்களில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டு, முடிக்கப்பட உள்ளதாம்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என கமல் மற்றும் ஷங்கர் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரமிற்கு பின் இந்தியன் 2

விக்ரமிற்கு பின் இந்தியன் 2

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிக்பாஸ் ப்ரோமோ ஷுட்டிங், தேவர்மகன் 2 படத்திற்கு திரைக்கதை எழுதுவது, பாபநாசம் 2 படம் தொடர்பான பேச்சுவார்த்தை என பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையே இந்தியன் 2 விவகாரம் முற்றிலும் முடிவுக்கு வந்த உடன், விக்ரம் படத்தின் வேலைகளை முடித்து விட்டு இந்தியன் 2 வில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

தங்கச்சி பாசம் அதான் ஓடிவந்துட்டேன் | Actor Sasikumar | Robo Shankar | 3C Showroom | Filmibeat Tamil
முடிவுக்கு வரும் பிரச்சனைகள்

முடிவுக்கு வரும் பிரச்சனைகள்

2 நாட்களுக்கு முன்பு தான் இம்சை அரசன் 24 ம் புலிகேசி படம் தொடர்பான வடிவேலுவுடனான பிரச்சனையை முடித்தார் ஷங்கர். இதைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 பிரச்சனையையும் முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X