Don't Miss!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மகளுடன் ரஜினியை சந்திக்க இதுதான் காரணமா?.. இயக்குநர் ஷங்கர் போட்ட மாஸ்டர் பிளான்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சென்று பார்த்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான திரைப்படம் சிவாஜி.
இப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்
ரஜினி எதிர்பார்ப்பது வேற...தலைவர் 169 ஷுட்டிங் தாமதத்திற்கு இது தான் காரணமா?

சிவாஜி
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம் சிவாஜி. 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது. இப்படம் வெளிவந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்படத்திற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
காமெடி,ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், ரஜினி இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்து மிரட்டி இருப்பார். ரஜினியின் திரைப்பயணத்தில் சிவாஜி திரைப்படம் ஒரு மைல்கல்லாக உள்ளது. இப்படத்தில் நடிப்பு, பிரம்மாண்டம், சென்டிமென்ட், சிறப்பான பாடல்கள் என அனைத்தும சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. பாடல் காட்சிகளுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்கள் அதில் ரஜினிகாந்த், ஸ்ரேயாவின் நடனம் என அனைத்தும் அசத்தலாக இருக்கும்.

மறக்க முடியாத அனுபவம்
சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியுடன் சென்றுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து, சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி ஆற்றியது மறக்க முடியாத அனுபவம். அவரின் பாசம் என்னுடைய அனைத்தும் நாட்களை இனிமையாக மாற்றியது என பதிவிட்டுள்ளார் ஷங்கர்.

ஷங்கரின் மாஸ்டர் பிளான்
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது மகள் அதிதி சங்கருடன் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதற்கு முக்கிய காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தனது மகள் அதிதியை எப்படியாவது சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில், ஷங்கர் தன் மகளை உடன் அழைத்துச்சென்றுள்ளார். இதனால், ரஜினிகாந்த் மூலம் மகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
Recommended Video

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.