»   »  சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக்... ரொம்ப காஸ்ட்லி ரிலீஸ் !

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக்... ரொம்ப காஸ்ட்லி ரிலீஸ் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிராக்கை, இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்டார்.

ரஜினிமுருகன் படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெமோ. 45 கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சொந்தமாகத் தயாரித்து வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Director Shankar Release Sivakarthikeyan's Remo First Look

ரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம் என முன்னணி சினிமாக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில், பெண் உட்பட 3 வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

விக்ரம் பல்வேறு தோற்றங்களில் மிரட்டிய அந்நியன் படத்தில் இடம்பெற்ற ரெமோ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்துவிட்டனர். இதனால் ரெமோவை உருவாக்கிய ஷங்கரை வைத்தே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Director Shankar Release Sivakarthikeyan's Remo First Look

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் விழா சென்னை தாஜ் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. விழாவில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லோகோவை ஏவிஎம் சரவணன் திறந்து வைத்தார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

/news/director-shankar-release-sivakarthikeyan-s-remo-first-look-040723.html
English summary
Director Shankar Release Sivakarthikeyan's Remo First Look & Single Track on June 23

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil