சூர்யா – கார்த்தி இணையும் படத்தில் ஹீரோயினாகும் ஷங்கர் மகள்....மாஸ் டைட்டிலுடன் வெளியான அப்டேட்

சென்னை : தென்னிந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான, பிஸியான அண்ணன் - தம்பி நடிகர்களில் சூர்யா - கார்த்தியும் ஒருவர். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, வரிசையாக பல படங்களில் இருவரும் நடித்து அசத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக மல்டி ஹீரோ சினிமாக்களின் வருகை அதிகரித்து வருவதால் சூர்யா - கார்த்தி இணைந்து ஒரே படத்தில் எப்போது நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக நிலவி வருகிறது.

ரசிகர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யாவும் கார்த்தியும் இணைந்தனர். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இந்த படம் மாஸ் வெற்றி படமாகவும் அமைந்தது.

மீண்டும் சூர்யா – கார்த்தி

மீண்டும் சூர்யா – கார்த்தி

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவும், கார்த்தியும் ஒரு படத்தில் மீண்டும் இணைய போகிறார்கள். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் மாஸ் டைட்டில், படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

கார்த்தியின் விருமன்

கார்த்தியின் விருமன்

சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கார்த்தியின் அடுத்த படத்திற்கு 'விருமன்' என பெயரிடப்பட்டுள்ளது. கொம்பன் படத்தை இயக்கிய முத்தைய்யா தான் இந்த படத்தையும் இயக்க போகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு விருமன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா

சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா

தொடர்ந்து சர்ப்ரைஸ் அறிவிப்பாக, இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் சூர்யா. அதிதி ஷங்கரை வரவேற்கிறேன். நீங்கள் அனைவரின் மனங்களிலும் இடம்பிடிக்க கடவுள் அருளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சொன்ன ஷங்கர்

நன்றி சொன்ன ஷங்கர்

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சூர்யா மற்றும் கார்த்திக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார் ஷங்கர். அதில், எப்போதும் தரமான படங்களை தரும் 2டி என்டர்டைன்மென்ட் மூலம் அதிதியை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் சூர்யா, ஜோதிகாவிற்கு எனது நன்றிகள். கார்த்தி, முத்தையா, யுவன் சங்கர் ராஜா, ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கும் நன்றி. தனது முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை காட்டி சினிமா ரசிகர்களின் அன்பை பெறுவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கதை சொன்ன போஸ்டர்

கதை சொன்ன போஸ்டர்

வறண்ட பூமியில் வேட்டி கட்டி தூரத்தில் நடந்து வரும் கார்த்தி, பாவாடை தாவணியில் அசத்தலாக வரும் அதிதி ஷங்கர் என இரண்டு விதமான போஸ்டர்களுடன் விருமன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை பார்க்கும் போதே இது கிராமத்து கதை, அதுவும் விவசாயத்தை மையமாகக் கொண்ட கதை என்பது நன்றாக தெரிகிறது.

பொன்னியின் செல்வன் ஓவர்

பொன்னியின் செல்வன் ஓவர்

தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு விருமன் படத்தின் ஷுட்டிங் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே சமயத்தில் 4 படங்கள்

ஒரே சமயத்தில் 4 படங்கள்

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் தற்போது ஒரே சமயத்தில் 4 படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் உடன் பிறப்பே, ஜெய் பீம், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், ஓ மை டாக் ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X