»   »  வாவ்.. பிரமாண்டங்களின் புதல்வர்கள் அருகருகே.. - '2.ஓ' விழாவில் ஜூனியர் ஷங்கர்!

வாவ்.. பிரமாண்டங்களின் புதல்வர்கள் அருகருகே.. - '2.ஓ' விழாவில் ஜூனியர் ஷங்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய் : இயக்குநர் ஷங்கரின் மகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனுடன் '2.ஓ' இசைவெளியீட்டு விழாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் '2.ஓ' படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்வில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக பல கோடி ரூபாய் செலவில் ப்ரொமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்து திரையுலகமே வியந்தது.

ஏ.ஆர்.ஆர்.அமீன்

ஏ.ஆர்.ஆர்.அமீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் '2.ஓ' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மேடையிலேயே பாடி அசத்தினார். ரஹ்மானைப் போலவே ஜூனியர் ரஹ்மானுக்கும் இப்போதே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் மகன்கள்

தனுஷ் மகன்கள்

தனுஷின் மகன்கள் தேவ், லிங்கா உட்பட ரஜினி குடும்பத்தினர் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். இயக்குநர் ஷங்கரின் மகனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

ஷங்கர் மகன்

இதுவரை வெளியே வராத ஷங்கர் மகனின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் ஷங்கரும், ஜூனியர் ரஹ்மானும் இணைந்திருக்கும் புகைப்படம் என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷல் தான்.

பிரமாண்ட கூட்டணி

பிரமாண்ட கூட்டணி

'நண்பன்' படத்தைத் தவிர, ஷங்கரின் முதல் படமான 'ஜெண்டில்மேன்' முதல் இன்று வரை ரஹ்மான் தான் அவரது எல்லாப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இருவரது கூட்டணியில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்கள் செம ஹிட் ஆகியிருக்கின்றன. இப்போது இருவரின் மகன்களும் நண்பர்களாகி இருக்கிறார்கள்.

English summary
The son of director Shankar and Ameen son of music composer AR Rahman, is together at the '2.O' audio launch ceremony. This epic picture is going viral on the social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil