Don't Miss!
- Finance
எலான் மஸ்க் மீது டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு: என்ன காரணம்?
- Technology
ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 2022 அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!
- Sports
"போட்டிக்கு முன் இப்படியே செய்வது" மனதளவில் காயப்பட்ட டூப்ளசிஸ்.. ஆர்சிபி குறித்து உருக்கமான பேச்சு
- Lifestyle
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
- News
"மோடி ஜி.. இந்த மேட்டர் என்னாச்சு?"- 17 இடங்களில் திடீரென முளைத்த மர்ம பேனர்கள்.. யார் பார்த்த வேலை?
- Automobiles
இந்த கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா விற்பனையே ஆகல...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குநர் ஷங்கரின் மகனும் ஹீரோவாக போகிறாராம்.. அதுவும் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தெரியுமா?
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயின் ஆகி உள்ள நிலையில், அவரது மகனும் தற்போது ஹீரோவாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய ஷங்கர் தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகன் பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

மிஸ்டர் பிரம்மாண்டம்
ரோபோவுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என எந்திரன் படத்தை இயக்கி உலகளவில் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். மல்டிபிள் பெர்சனாலிட்டியை இந்தியாவிற்கு அந்நியன் படம் மூலமாக காட்டி மெர்சல் காட்டியவர். ஜென்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன், சிவாஜி, 2.0 என எந்த படம் எடுத்தாலும் இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு படத்தை இயக்கும் திறமை கொண்டவர் ஷங்கர். ஒரு பாடலுக்கே பத்து படங்களின் பட்ஜெட்டை போட்டு எடுப்பதால் மிஸ்டர் பிரம்மாண்டம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

சினிமாவுக்கு வந்த ஷங்கர் மகள்
மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணத்தை முடித்த இயக்குநர் ஷங்கர் இளைய மகள் அதிதி ஷங்கரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரை சினிமா ஹீரோயின் ஆக்கி உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் அதிதி ஷங்கர். சமீபத்தில் மருத்துவ பட்டத்தையும் வென்று தனது தந்தையின் கனவையும் நனவாக்கினார்.

அர்ஜித் ஷங்கர்
மகளை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் ஹீரோவாக போகிறார் என்கிற அட்டகாசமான தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டில் இயக்கம் குறித்த படிப்பை படித்து வந்த அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகப் போகிறார் என்கிற தகவல் கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

அந்த படத்தின் பார்ட் 2வில்
ஷங்கர் தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிகர் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேண்ட்சம் பாயான அர்ஜித் ஷங்கருக்கு அந்த படம் நல்ல வெற்றியை ஈட்டித் தரும் என இயக்குநர் ஷங்கர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் மகனுடன்
சமீபத்தில் நடிகர் விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் உடன் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் செம வைரலானது. ஷங்கர் மகன் இயக்கத்தில் விக்ரம் மகன் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் வியந்த நிலையில், தற்போது ஷங்கர் மகனே ஹீரோவாக போவது சூப்பரான விஷயம். இயக்குநர் ஷங்கருக்கே ஆரம்பத்தில் நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.