twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் 52 வது பிறந்த தினம் இன்று

    By Manjula
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு வித்திட்ட இயக்குநர் ஷங்கர் அவர்களின் 52 வது பிறந்ததினம் இன்று. 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவர் ஷங்கர்.

    கோவில்களின் நகரத்தில் பிறந்தவருக்கு கலைகளின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது, தனது மனக்கண்ணில் விரிந்த காட்சிகளை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததில் வியப்பேதும் இல்லை.

    சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்து விட்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது சினிமா பற்றிய புரிதலை அதிகப்படுத்திக் கொண்டவர் ஷங்கர்.

    இந்தப் பிறந்தநாளில் ஷங்கர் இயக்கிய படங்களைப் பற்றி ஒரு பார்வை பார்க்கலாம்.

    ஜென்டில்மேனாக

    ஜென்டில்மேனாக

    1993 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன்திரைப்படத்தின் மூலம் ஜென்டில்மேன் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அந்த ஆண்டில் மிகவும் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஜென்டில்மேன், அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி ஆகியோருடன் மேலும் பலர் இணைந்து நடித்த ஜென்டில்மேன் மெகா ஹிட்டடித்து அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக மாறியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

    காதலனாக

    காதலனாக

    ஜென்டில்மேன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் 1994 ம் ஆண்டில் ஷங்கர் பிரபுதேவா- நக்மா இருவரையும் வைத்து எடுத்த திரைப்படம் காதலன், காதலை அழகாக பதிவு செய்த இந்தப் படத்தில் பாடல்கள் மாபெரும் ஹிட்டாயின. குறிப்பாக என்னவளே அடி என்னவளே, முக்காபுல, ஊர்வசி ஊர்வசி போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்களாக அறியப்படுகின்றன.

    இந்தியனும் முதல்வனும்

    இந்தியனும் முதல்வனும்

    லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசியல் சார்ந்த படங்களாக வெளிவந்த இந்தியன் மற்றும் முதல்வன் ஆகிய படங்களில் ஷங்கரின் சமுதாய அக்கறை நன்கு தெரியும். லஞ்சத்தைப் பற்றி பேசிய இந்தியன் திரைப்படம் கமலின் எவர்க்ரீன் படங்களில் இன்றளவும் ஒன்றாக விளங்குகின்றது. முதல் பட நாயகனான அர்ஜுனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படமாக இன்றளவும் திகழ்கின்றது. குறிப்பாக இந்த 2 படங்களிலும் இடம்பெற்ற வசனங்கள் எளிய மக்களையும் கவர்ந்தன.

    உலகின் 7 அதிசயங்கள் ஜீன்ஸின் மூலம்

    உலகின் 7 அதிசயங்கள் ஜீன்ஸின் மூலம்

    1998 ம் ஆண்டு பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ், காதல் மற்றும் காமெடி கலந்து உருவான இந்தப் படத்தில் உலகின் 7 அதிசயங்களை கண்முன்னே கொண்டு வந்து காட்டி ரசிகர்களை சிலிர்க்க வைத்திருப்பார் ஷங்கர்.

    சிவாஜியும் அந்நியனும்

    சிவாஜியும் அந்நியனும்

    விக்ரமை வைத்து இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் சிறிய தவறுகளே பெரிய விளைவுகளுக்கு காரணமாகின்றன என்பதை அழுத்தமான திரைக்கதையுடன் எடுத்திருந்தார். ரஜினியை வைத்து ஷங்கர் முதன்முதலாக இயக்கிய சிவாஜி திரைப்படம் கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றிய கதையாக அமைந்திருந்தது, மேலும் சிவாஜி திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் 100 கோடிப் படம் என்ற பெருமையையும் பெற்றது.

    எஸ் பிக்சர்ஸ்

    எஸ் பிக்சர்ஸ்

    தரமான படங்கள் மற்றும் இயக்குனர்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்புக் கம்பெனியை 2004 ம் ஆண்டில் ஷங்கர் தொடங்கினார். காதல், வெயில், இம்சை அரசன் 23 ம் புலிகேசி, கல்லூரி, அறை எண் 305 ல் கடவுள், ரெட்டை சுழி, அனந்தபுரத்து வீடு மற்றும் ஈரம் போன்ற படங்கள் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படங்களே.இவற்றில் பல திரைப்படங்கள் தமில் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படங்களாகத் திகழ்கின்றன, வெயில் திரைப்படம் தேசியவிருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

    எந்திரன்

    எந்திரன்

    2010 ம் ஆண்டில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் தென்னிந்தியாவின் மிக அதிக வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 283 எந்திரன் அசால்ட்டாக வசூலித்தது.

    நண்பன் மற்றும் ஐ

    நண்பன் மற்றும் ஐ

    ஷங்கர் முதன்முதலில் ரீமேக் செய்த திரைப்படம் நண்பன் 2012 ம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் வரிசையாக பல தோல்விகளை சந்தித்திருந்த விஜய்க்கு சொல்லிக் கொள்ளும் ஒரு படமாக அமைந்தது. ஐ திரைப்படத்தில் தவறான மருந்தால் ஏற்படும் விளைவுகளை காதலுடன் இணைத்து கதை சொல்லியிருந்தார் ஷங்கர், எனினும் ஆரம்பகாலத்தில் வந்த படங்களைப் போல தற்போது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் படங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் எந்திரன் 2 திரைப்படம் இந்த குற்றச்சாட்டை உடைக்கும் வகையில் உருவாக வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை..பார்க்கலாம்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறோம்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர் சார்..

    English summary
    Director Shankar Today Celebrating His 52nd Birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X