இந்தியன் 2 விற்காக ஷங்கர் செய்ய போகும் காரியம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கர் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் ஏதும் இயக்காமல் இருந்து வருகிறார். 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 படம் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக உள்ளது.
கொரோனா, லாக்டவுன், விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு, லைகா - ஷங்கர் இடையேயான வழக்கு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஷுட்டிங் துவங்கப்படவில்லை.
இந்தியன 2 பற்றி பல்வேறு தகவல்கள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கப்படும் என்பது பற்றி படக்குழு சார்பில் இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை.

எத்தனை வதந்திகளை கிளப்புறது
இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங் மீண்டும் என தகவல் வெளியானது. அதே சமயம், படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்த காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதில் பாலிவுட் டாப் நடிகையான தீபிகா படுகோன், கமலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

ஹாட் அப்டேட் தந்த காஜல்
ஆனால் நேற்று இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் பேசிய காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் இருந்து தான் விலகவில்லை. செப்டம்பர் 13 ம் தேதி மீண்டும் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. இதில் தானும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தில் முக்கிய ரோலில் நடிப்பவரே ஷுட்டிங் அப்டேட் கொடுத்திருப்பதால் அது உண்மையாக தான் இருக்கும் என ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

என்னப்பா ரொம்ப குழப்புறீங்க
அதே சமயம் டைரக்டர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஆர்சி 15 படத்தில் பிஸியாக இருக்கும் ஷங்கர், எப்படி இந்தியன் 2 படத்தை துவக்குவார். ஆர்சி 15 படமும் மெகா பட்ஜெட் படம் என்பதால் ரசிகர்கள் குழபத்தில் உள்ளனர்.

ஷங்கர் எடுத்துள்ள முடிவு
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, பல காலமாக கிடப்பில் இருக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான இந்தியன் 2 படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை முதலில் நடத்தி முடிப்பதற்காக ஆர்சி 15 படத்தின் ஷுட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்காக தான் அந்த முடிவா
கமல் நடித்த விக்ரம் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று, பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளதால் கமல் அடுத்து நடிக்க போகும் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த சமயத்தில் இந்தியன் 2 படத்தை முடித்து, வெளியிட்டால் அது நிச்சயம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என படக்குழு நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதுனால் தான் இந்தியன் 2 வேலைகளை முதலில் கையில் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











