»   »  "விவேகம்" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு !

"விவேகம்" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கையில் நுஞ்சாக் உபகரணத்துடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சிவா.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.


Director siva has released a working still of Thala Ajith

இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார். இந்நிலையில் அஜித்தின் அட்டகாசமான புதிய ஸ்டில் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்தார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து அதிரடியாக இந்தப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் தற்காப்பு ஆயுதமான நுஞ்சாக் உபகரணத்தை வைத்து கொண்டு அஜித் நிற்கும் புகைப்படத்தை இயக்குநர் சிவா வெளியிட்டுள்ளார்.

English summary
Director siva has released a new working still of Thala Ajith

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil