»   »  விவேகம் தமிழ்ப் படமே இல்லையாம்... வேற?

விவேகம் தமிழ்ப் படமே இல்லையாம்... வேற?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவேகம் படம் தமிழ்ப் படமே அல்ல... அது இன்டர்நேஷனல் படம் என படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

அஜித் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வரும் படம் விவேகம்.

சமீபத்தில் படத்தின் சிங்கிள் பாடல், டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது.

முதல் முறை

முதல் முறை

படம் குறித்து எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடாமல் இருந்த இயக்குநர் சிவா, முதல் முறையாகப் பேசியுள்ளார். படத்தில் அக்ஷரா ஹாஸனின் பாத்திரம் முக்கியமானது என்றும், அவரைச் சுற்றி கதை நகர்வதாகவும் சிவா குறிப்பிட்டுள்ளார்.

ரேஞ்சே வேற...

ரேஞ்சே வேற...

"விவேகம் படம் இந்திய உணர்வுகளைக் கொண்டதாக இருந்தாலும், இதனை ஒரு சர்வதேசப் படமாகத்தான் பார்க்க வேண்டும். அஜித் இதில் சர்வதேச புலனாய்வு ஏஜென்டாக நடிக்கிறார்.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்க்கு இதில் மிக அழுத்தமான வேடம். வெறும் வில்லனாக மட்டுமல்லாமல், பவர்ஃபுல் பாத்திரமாக நடித்துள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்தான் நாயகி. அவர் என்ஆர்ஐ பெண்ணாக வருகிறார். குடும்பப் பாங்கான வேடம்.

ஐரோப்பிய நாடுகளில்

ஐரோப்பிய நாடுகளில்

முழுக்க ஐரோப்பிய நாடுகளான செர்பியா, பல்கேரியா, குரேஷியா, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது விவேகம்.

அஜித்தின் சிரத்தை

அஜித்தின் சிரத்தை

இந்தப் படத்தில் அஜித்தின் உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டது. அதனால் அவர் தினசரி ஜிம் சென்று கடினமான பயிற்சிகள் செய்து தன் பிட்னெஸை சரியாக வைத்துக் கொண்டார்.

செம த்ரில்லர்

செம த்ரில்லர்

விவேகம் படத்தின் ஒவ்வொரு மணித் துளியும் சுவாரஸ்யமாக நகரும். அந்த அளவு பர்ஃபெக்ஷன் கொடுத்துள்ளோம்," என்றார் சிவா.

இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

English summary
Director Siva reveals many informations of Ajith's Vivegam movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil