Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 4 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 5 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 5 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குனர் 'சிறுத்தை' சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்.. திரையுலகம் இரங்கல்
சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா. இதையடுத்து அவர் பெயருடன் 'சிறுத்தை' சேர்ந்துகொண்டது.
இந்தப் படத்துக்கு முன், தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

ரஜினியின் அண்ணாத்த
2014-ம் ஆண்டு வீரம் படத்தின் மூலம் அஜித்துடன் சிவா இணைந்தார். இந்த படம் ஹிட்டானது. அடுத்தடுத்து விஸ்வாசம் வரை 4 படங்களில் அஜித்துடன் பணியாற்றினார். விஸ்வாசம் வெற்றியை அடுத்து தற்போது ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

ஷூட்டிங் நிறுத்தம்
கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் தந்தை ஜெயக்குமார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புகைப்பட கலைஞர்
தந்தையின் திடீர் மரணத்தால் சிவாவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைத்துறையினரும், உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த ஜெயக்குமார், டாக்குமென்டரி புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர்.

இறுதிச் சடங்கு
அருணாச்சலம் ஸ்டூடியோவின் உரிமையாளர். தந்தை ஜெயக்குமாரின் மரண செய்தி கேட்டு இயக்குநர் சிவாவின் தம்பி, நடிகர் சிவா கேரளாவில் இருந்து சென்னைத் திரும்பியுள்ளார். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது. அவர் மறைவை அடுத்து திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.