ராஜமௌலியின் ‘SSMB 29‘ படம் குறித்த மாஸ் அப்டேட்.. மகேஷ் பாபுவின் ரசிகர்கள் குஷி!

சென்னை:தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் பிரம்மாண்டமான முறையில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருடம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தில் நடிக்க மகேஷ் பாபு சம்பளம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது இல்லாமல், படத்தின் வருவாயில் 20 சதவீதத்தை சம்பளத்திற்கு பதிலாக பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதே போல, எஸ்.எஸ். ராஜமௌலி தனது கடைசி படமான ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்க ரூபாய் 200 கோடியை சம்பளமாக பெற்றநிலையில், இந்தப் படத்திற்கு வருவாயில் 20 சதவீதத்தை ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் இப்படத்தில் நடித்து இருக்கும் பிரியங்கா சோப்ரா ரூ 30 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

director SS Rajamouli and mahesh babu s SSMB29 movie update
Photo Credit:

SSMB 29: காசியின் வரலாற்றை பேசும் தொன்மையான கதையாக உருவாகி வரும் இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது படப்பிடிப்பிலிருந்து சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதைதொடர்ந்து, கடுமையான பாதுகாப்புடன் ஒடிசாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதும் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில் மகேஷ் பாபு நடந்து வர, துப்பாக்கி ஏந்தியா பாதுகாவலர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவர் முன் மகேஷ்பாபு மண்டியிடுவது போல அந்த காட்சி இருந்தது. இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு மூன்றாவது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரடியான அப்டேட்: இந்நிலையில் SSMB 29 பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் மாதம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தைப் பார்த்த ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலியை அழைத்து வெகுவாக பாராட்டினார். அப்போது ஏற்பட்ட நட்பை தொடர்ந்து, 'அவதார் 3' படத்தின் புரமோஷனுக்காக இந்தியா வரும் அவர், SSMB 29 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X