twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி படத்தின் கதாசிரியர்.. எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தைக்கு கொரோனா உறுதி.. தனிமையில் சிகிச்சை!

    |

    சென்னை: பாகுபலி படத்தின் கதாசிரியரும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் மிக பிரமாண்டமாய் உருவான படம் பாகுபலி.

    இதன் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியானது.

    ராஜமவுலியின் தந்தை

    ராஜமவுலியின் தந்தை

    வசூலையும் அள்ளிக்குவித்து சாதனை படைத்தது. இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான் உட்பட வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது இப்படம். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆவார்.

    தலைவி திரைக்கதை

    தலைவி திரைக்கதை

    தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். தற்போது கங்கனா ரனாவத் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள தலைவி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதியுள்ளார்.

    விஜய்யின் மெர்சல்

    விஜய்யின் மெர்சல்

    அதுமட்டுமின்றி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா, மகதீரா, சத்ரபதி, எமதுங்கா, உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.

    கொரோனா உறுதி

    கொரோனா உறுதி

    இந்நிலையில் விஜயேந்தி பிரசாத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள விஜயேந்திர பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    English summary
    Director SS Rajamouli's father Vijayendra Prasath tested covid positive. Vijayendra prasath is a story writer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X