லஸ்ட் ஸ்டோரிஸ் ஸ்டைலில் ஒரு வெப் சீரிஸ்... சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்
சென்னை: இயக்குனர் சுதா கொங்கரா, வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கிறார்.
Recommended Video
ஶ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த துரோகி படம் மூலம் இயக்குனரானவர் சுதா கொங்கரா. அடுத்து, மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.ஆர்.கோபிநாத்
ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது. இதில் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்
படத்தில் ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

ஷூட்டிங்
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான முதல் நாளிலேயே அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் படம் வெளியாக உள்ளது.

வெப் தொடர்
இதற்கிடையே இயக்குனர் சுதா கொங்கரா, வெப் தொடர் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடர் வெளியானது. அதை அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். பின்னர் இவர்களே கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரை இயக்கி இருந்தனர்.

4 இயக்குனர்கள்
அதே போல தமிழிலும் வெப் தொடர் ஒன்றை நான்கு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகியோர் இயக்க உள்ளனர்.

ஜெயராம் மகன்
சுதா கொங்கரா இயக்கும் தொடரில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் வரும் 25 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











