என்னோட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரே பீலிங்.. இதுமட்டும் நடந்திருந்தா.. மனம்திறந்த சுந்தர் சி!
சென்னை : நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி நடிப்பில் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பட்டாம்பூச்சி படம்.
சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சைக்கோவாக நடித்துள்ளார் நடிகர் ஜெய்.
நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் தற்போது ரிலீசாக உள்ளது.

இயக்குநர் சுந்தர் சி
இயக்குநர் சுந்தர் சி சிறப்பான பல படங்களை கொடுத்தவர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவரது படங்கள் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. தொடர்ந்து காமெடிப் படங்களை கொடுத்துவந்த சுந்தர் சி அரண்மனை உள்ளிட்ட ஹாரர் கலந்த காமெடி படங்களையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

காமெடி கலாட்டா படங்கள்
ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இவர் படமியக்கியுள்ளார். மேலும் கலகலப்பு உள்ளிட்ட படங்களும் இவரது இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை தன்னுடைய காமெடி கலாட்டாக்களால் கட்டிப் போட்டன. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி வரவேற்பு பெற்றது.

சொந்த தயாரிப்பு
தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார் சுந்தர் சி. இதனிடையே தன்னை நடிகராகவும் நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து அரண்மனை வரிசை படங்களிலும் இவரை சிறப்பான கேரக்டர்களில் பார்க்க முடிந்தது. இதேபோல முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட காமெடி படங்களிலும் நடித்துள்ளார்.

பட்டாம்பூச்சி ரிலீஸ்
இந்நிலையில் தற்போது சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து மிரட்டியுள்ள பட்டாம்பூச்சி படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது ரிலீசாக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கோ த்ரில்லர் படம்
சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சைக்கோவாக நடிகர் ஜெய் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக சுந்தர் சி, ஜெய் உள்ளிட்டவர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுந்தர் சி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

விஜய்யை இயக்காதது வாழ்நாள் ஃபீலிங்
தான் ரஜினி, கமல் மற்றும் அஜித்தை இயக்கியுள்ள நிலையில், விஜய்யை இயக்காதது தன்னுடைய வாழ்நாள் பீலிங்காக மாறியுள்ளதாக அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரையும் இயக்கியிருந்தால் தமிழின் முன்னணி ஹீரோக்களை இயக்கியதாக முழுமையாக உணர்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி, கமல், அஜித்தை இயக்கிய சுந்தர் சி
ரஜினியின் அருணாச்சலம் கமலின் அன்பே சிவம் மற்றும் அஜித்தின் உன்னைத் தேடி உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது காபி வித் காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இவரது நடிப்பில் பட்டாம்பூச்சி படம் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











