»   »  அரசியலில் குதித்த சுந்தர்.சி... குஷ்புவுக்கு போட்டியா?

அரசியலில் குதித்த சுந்தர்.சி... குஷ்புவுக்கு போட்டியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைப்பை பார்த்து என்ன சுந்தர்.சியும் அரசியலில் குதித்து விட்டாரா என ஆச்சர்யப் படாதீர்கள். சுந்தர்.சி. தனது புதிய படமொன்றில் அரசியல்வாதியாக நடிக்கிறார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி தற்போது, தனது உதவி இயக்குநர் இயக்கும் முத்துன கத்திரிக்காய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கலகலப்பு, அரண்மனை, அரண்மனை 2 என சிறிது காலம் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்த சுந்தர்.சி இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

காதலில் விழும் அரசியல்வாதி...

காதலில் விழும் அரசியல்வாதி...

இந்தப் படத்தை வெங்கட்ராகவன் என்பவர் இயக்குகிறார். அரசியல் மற்றும் காதலில், நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை, நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்கிறார்களாம். சுந்தர்.சியின் ஜோடியாக இப்படத்தில் பூனம் பஜ்வா நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

பார்த்ததும் காதல்...

பார்த்ததும் காதல்...

'அவ்னி மூவிஸ்' சார்பில், இயக்குனர் ​சுந்தர்.சி ​இப்படத்தைத் தயாரிக்கிறார். 40 வயதை நெருங்கியும், திருமணம் ஆகாமல் இருக்கும், முழு நேர அரசியல்வாதியான நாயகனுக்கு, நாயகியை பார்த்ததும் காதல் ஏற்படுவது தான் படத்தின் கதை.

குஷ்பு...

குஷ்பு...

சுந்தர்.சியின் மனைவி காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, சட்டசபைத் தேர்தல் விவகாரங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவர் ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக களமிறக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.

ரீல் அரசியல்வாதி...

ரீல் அரசியல்வாதி...

இந்நிலையில், மனைவி நிஜ அரசியலில் தீயாய் வேலை செய்து கொண்டு இருக்க, கணவர் சுந்தர்.சி யோ ரீல் அரசியல்வாதியாக முத்தின கத்திரிக்காயில் நடித்து வருகிறார்.

அரசியல் நையாண்டிகள்...

அரசியல் நையாண்டிகள்...

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற, அரசியல் நையாண்டிகள், படத்திற்கு பலம் சேர்க்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். திருநெல்வேலி, சென்னை, டெல்லி என பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த முத்தின கத்திரிக்காய் எப்போ சந்தைக்கு வரும்னு தான் தெரியலை.!

English summary
Director Sundar C is to produce his assistant director Venkat Raghavan’s film, Muthina Kathirikai. He will also be playing the lead in the film along with Poonam Bajwa in it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil