»   »  நடிகைகள் பற்றி சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்டார் இயக்குநர் சுராஜ் !

நடிகைகள் பற்றி சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்டார் இயக்குநர் சுராஜ் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கத்திச் சண்டை இயக்குநர் சுராஜ் தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், "நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, ரசிகர்கள் கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள்." என்று தெரிவித்தார் இயக்குநர் சுராஜ். சுராஜின் இந்த கருத்துக்கு நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 Director suraj apologies for his comments about actress

இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "' என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதா நாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும்.

எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்தும் எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை, நான் திரும்பப் பெறுகிறேன்' என சுராஜ் கூறியுள்ளார்.

 Director suraj apologies for his comments about actress

தமன்னா உட்பட திரையுலகின் அனைத்து கதாநாயகிகளிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். யாரையும் தவறான நோக்கில் சித்தரிப்பதும், அவர்களது நம்பிக்கைகளை காயப்படுத்துவதும் எனது நோக்கமல்ல. மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Director Suraaj apologized for his comment about Heroine

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil