twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அதெப்படி ஒரு இயக்குநரை அவன் இவன் என்று ஒருமையில் பேசலாம்”.. வடிவேலுவை வன்மையாக கண்டித்த சுசீந்திரன்

    சிம்புதேவன் பற்றிய வடிவேலுவின் பேச்சுக்கு இயக்குநர் சுசீந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Actor Vadivelu interview: வடிவேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்கள்- வீடியோ

    சென்னை: இயக்குநர் சிம்புதேவனை வடிவேலு அவன் இவன் என ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது என இயக்குநர் சுசீந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உலகளவில் நேசமணி விசயம் டிரெண்டிங்கானதைத் தொடர்ந்து, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார் நடிகர் வடிவேலு. அப்பேட்டியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக அவர் சிம்புதேவன் மற்றும் ஷங்கரை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Director Suseenthiran condemns actor Vadivelu

    வடிவேலுவின் இந்தப் பேச்சு தொடர்பாக இயக்குநர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே மூடர்கூடம் நவீன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இது தொடர்பாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் சுசீந்திரனும் வடிவேலுவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Director Suseenthiran condemns actor Vadivelu

    அக்கடிதத்தில் அவர், "வடிவேலு அவர்கள், 23-ம் புலிகேசி பட இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் பற்றி பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சிம்புதேவன் 23-ம் புலிகேசி மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தந்தார். அதன் பிறகு பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார்.

    Director Suseenthiran condemns actor Vadivelu

    ஒரு இயக்குநரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. புலிகேசி-க்கு பிறகு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குநர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Suseenthiran condemned actor Vadivelu for his remarks about director Simbudevan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X