»   »  20 ரூபாய் டாக்டர் குடும்பத்தை கௌரவித்த இயக்குநர் சுசீந்திரன்!

20 ரூபாய் டாக்டர் குடும்பத்தை கௌரவித்த இயக்குநர் சுசீந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர்கள் சந்தீப் கிஷன், விக்ராந்த், லட்சுமி இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் ஜெ லஷ்மண், தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

20 ரூபாய் டாக்டர்

20 ரூபாய் டாக்டர்

இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர்' என்பார்கள். அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் '20 ருபாய் டாக்டர்' என்று அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம். கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய குறைய தனது தனது பீஸை உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டுவந்தார்.

ஏழைகளின் டாக்டர்

ஏழைகளின் டாக்டர்

கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய தொகை 20 ரூபாய்தான். நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்று பெயர் வந்துவிட்டது. கடந்த வருடம் இவர் இறந்து போன விஷயம் அறிந்த கோவை மக்கள் 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர்.

கௌரவம்

கௌரவம்

அந்த அளவுக்கு சிறந்த மனிதரான அவரின் மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோர் இன்று 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கதைக்குத் தொடர்பு

கதைக்குத் தொடர்பு

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் கதைக்கும் மருத்துவ துறைக்கும் சம்பந்தம் உள்ளதால் இந்தக் குடும்பத்தினரை அழைத்துப் பாராட்டியதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.

திரைப்படத்தின் டைட்டிலை இயக்குநர் சுசீந்திரனினுடைய தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.

English summary
Director Suseenthiran has honoured the family of '20 Rs Doctor' at his movie title release event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil