சுசி கணேசனின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய இளையராஜா...அப்படி என்ன கனவு ?

சென்னை : டைரக்டர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்து மரியாதை செய்துள்ளார் சசி கணேசன்.

பாலிவுட், கோலிவுட் என அடுத்தடுத்து படம் இயக்கி பிஸியாக இருந்து வருகிறார் சுசி கணேசன். 2022 ல் தனது சொந்த தயாரிப்பு பேனரின் கீழ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்திற்கு வஞ்சம் தீர்த்தாயடா என பெயரிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு, புதிய போஸ்டருடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

உண்மை சம்பவ கதை

உண்மை சம்பவ கதை

இந்தியில் Dil Hai Gray என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசி கணேசன். இதைத் தொடர்ந்து தமிழில் படம் இயக்கும் வேலைகளில் இறங்கி உள்ளார்.

4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன்.

இளையராஜாவுடன் கைகோர்ப்பு

இளையராஜாவுடன் கைகோர்ப்பு

இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசி கணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

கனவு நிறைவேறியது

கனவு நிறைவேறியது

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறுகையில், கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது " வஞ்சம் தீர்த்தாயடா " படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன். என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.

பெரிய கொடுப்பினை

பெரிய கொடுப்பினை

80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை 'படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இருக்கும். இளையராஜா போன்ற மேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை " என்றார். சுசி கணேசன் தனது சொந்த தயாரிப்பு பேனரின் கீழ் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

புதிய அனுபவத்தை தரும்

புதிய அனுபவத்தை தரும்

இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என சுசி கணேசன் ஏற்கனவே கூறி இருந்தார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரின் விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X