»   »  சின்னம் பார்த்து ஓட்டுப் போடுவதைவிட... நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப் போடவேண்டும் - டி.ராஜேந்தர்

சின்னம் பார்த்து ஓட்டுப் போடுவதைவிட... நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப் போடவேண்டும் - டி.ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''சின்னம் பார்த்து ஓட்டுப் போடுவதைவிட நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப் போடவேண்டும்'' என நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடிபெற்று வருகிறது. மழை பெய்தாலும் மக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

மற்றொருபுறம் திரை நட்சத்திரங்களும் தங்களது ஜனநாயக்கடமையை ஆற்றி வருகின்றனர்.

விஜய்-விஷால்

விஜய்-விஷால்

நடிகர் விஜய் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை நீலாங்கரைப் பகுதியில் பதிவு செய்தார்.இதேபோல நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நடிகர் ஆர்யாவுடன் வந்து, சென்னை அண்ணா நகரில் தன்னுடைய வாக்கினைப் பதிவு செய்தார்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கொட்டும் மழையில் நனைந்தபடி வந்து, தன்னுடைய வாக்கினை தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் பதிவு செய்தார்.வாக்களித்த பின் டி.ராஜேந்தர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் ''குடிமகன்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்

சரியான நபரை

சரியான நபரை

கதிரவன் மேகத்தில் மறைந்தாலும் மக்கள் வாக்களிக்கத் தவறவில்லை. நான் வரிசையில் நின்று சட்டத்தை மதிக்க விரும்புகிறேன். அதேபோல அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.மக்கள் சரியான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பணத்தால் மக்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். பாமர மக்கள் தெளிவாகவும், நெளிவு சுளிவாகவும் இருக்கிறார்கள்.

எதிர்காலம்

எதிர்காலம்

கையில் கொடுக்கும் நோட்டைப் பார்க்காமல் உங்கள் 5 ஆண்டுகால எதிர்காலத்தைப் பாருங்கள்.வெள்ளைக்காரர்கள் போனாலும் கொள்ளைக்காரர்களிடம் நாடு சிக்கிக் கொண்டது. நான் எந்தக் கட்சிக்கும் இல்லாமல் நடுநிலைமையாக பேசுகிறேன். சின்னம் பார்த்து ஓட்டுப் போடுவதைவிட நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப் போடவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல மேலும் பல பிரபலங்களும் தங்களுடைய வாக்கினை வரிசையில் நின்று ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

English summary
Actor/Director T.Rajendar Casting his Vote in T.Nagar Hindi Prachar Sabha on Monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil